
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.
English Meaning:
Give up Worldly Pursuits and Practice YogaDigging not the Earth,
The upland Kurava sails seas
And catches fatty fish;
Let him give it up;
(Rather let him the Earth dig)
There is a way of a Rich Catch,
That is Wealth and Food for all.
Tamil Meaning:
குறிஞ்சி நிலத்தவனாகிய குறவன் ஒருவன் அவ் விடத்துத் தன்தொழிலை விடுத்து, அதே நிலத்தை அடைந்து நிலத்தை உழுதான். பின்பு அத்தொழிலையும் முற்ற முடியாமல் இடையே உள்ள கொழுத்த மீனைப் பிடித்துக் கொணர்ந்தான். (`இவன் இந்தத் தொழிலையேதான் தொடர்ந்து செய்து நிலைபெறுவான்` என்பது என்ன நிச்சயம்!) ஆகவே, இவனைப்போல நிலையின்றி வாழ்தலைத் தவிருங்கள். தவிராது வேண்டின் நிற்பின், என்றும் நிலைத்து ஊதியத்தைத் தரக்கூடிய முதலைப் பெறுதலும் இன்றி, கொல்வது போலும் நிச்சல் நிரப்பு``3 (வறுமை) வந்து பற்றிக் கொள்ளுதலும் கூடும்.Special Remark:
`எந்தத் தொழிலையும் நிலையாகச் செய்யாது, தாவித் தாவிச் செல்பவன் நிலைபேறு எய்தான்` என்பதை நினைவூட்டி, `அது போல எந்த ஒரு சமயத்திலும் (மதத்திலும்) நிலைத்து நில்லாதவன் எந்தப் பயனையும் அடையமாட்டான்`, என்பதை உள்ளுறையாக உணர்த்தினார். `நிலையாகச் செய்தல்` என்பது, அந்தச் சமயத்தின் வழி நிற்றலை.`உயிர் இயல்பாகவே ஐம்பு வேடருட்பட்டது` என்பதனால் அதனை, `குறவன்` என்றார். குறவர் பண்பாடில்லாத வாழ்க்கையர் ஆதலின் அவர் இதனால் அவைதிக மதங்களைக் குறித்தது அவற்றில் உள்ள நவநிலையாகவும் பற்றாது விடுத்தலே, `அம்மதங்களை விடுத்தல்` எந்த நிலையாக ஓட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
மருத நிலத்தவர் பண்பாடுடைய வாழ்க்கையர் ஆதலின் அவர் இனம் வைதிக சமயங்களைக் குறித்தது.
நெய்தல் நில மக்கள் கொலை, களவு செய்யாது வாழ்தலால் குறவரினும் மேம்பட்டவராயினும், இழிதொழில் செய்பவர் ஆதலின் அவர் இனம் வாம மார்க்கங்களைக் குறித்தது. வாம மார்க்கத்தவர் கடவுட் கொள்கையினராதல் நினைவு கூரத்தக்கது.
`மீன்பிடி தொழிலின் இழிவினை உணர்ந்த காலத்தில் அதனையும் விட வேண்டி வரும்` என்பது குறிப்பு. தம்முள் வேறுபாடுடைய குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நிலங்கள், உயிர் வருக்கத்தவரால் தோற்றுவிக்கப்பட்டுத் தம்முள் மாறுபாடும் சமயங்கள் ஆகவே, இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, `இது ஆகும்; அது அல்லது எனும் பிணக்கில்லாது``9 அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்ட சித்தாந்த சைவம், ``தெண்கடல் வளாகம் பொதுமையின்றி - வெண் குடை நிழற்றும் ஒருமையரசன்,8 வாழ்வு போன்ற, என்றும் மாறாது நின்று நிலவும் வாழ்வாம்`` என்றதாயிற்று. ``புனத்துக் குறவன்`` என்பதை முதலில் வருவிக்க. ``மீன் விலக்குமின்`` என்றாராயினும், `அதுபோன்ற செயலையும்` கருத்தையும் நீக்குதல் என்றலே கருத்து.
`வேண்டின், யாவர்க்கும் அருத்தமும் இன்றி, அடுவதும் ஆம்` எனக் கூட்டி யுரைக்க. அருத்தம் - முதல். அது திருவருள். வறுமை - வினை. இதனுள் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், `சித்தாந்த சைவமே ``பேரா இயற்கை``3 யாகிய வீடுபேற்றினைத் தரும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage