
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.
English Meaning:
Freedom From FettersUnopened a Bud there is;
Freed from Fetters,
The bud soon blossoms, that you see
Give up desires, the Tattvas perish;
Unless they be from Fetters free,
They see not the Blossom.
Tamil Meaning:
ஓர் இல்லத்திற்குள்ளே சிறிதளவே அரும்பிய அரும்பு ஒன்று உள்ளது. அது மலராமைக்குக் காரணம் அதனை இறுக்கியுள்ள பொருள்கள். ஆகவே, இறுக்கிய பொருள்கள் நீங்கினால், அந்த அரும்பை மலர் நிலையிலும் வைத்துக் காண முடியும். (ஆனால், அரும்பு இல்லத்திற்குள் இருப்பதால், கதிரவன் ஒளி, காற்று முதலியன புக முடியாமையினால், இறுக்கியுள்ள பொருள்கள் நீங்குமாறில்லை.) உடையவள் அந்த இல்லத்தின்மேல் உள்ள பற்றைவிட்டு, அதனை வெற்ற வெளியாகச் செய்தால், இறுக்கிய பொருள்களும் நிங்கும்; அரும்பும் மலரும். ஆகவே, அந்த நிலையை அந்த இல்லம் வெளியானாலன்றிக் காண இயலாது.Special Remark:
மொட்டித்தல் - அரும்புதல். மொட்டு - அரும்பு. ஓர் மொட்டு, சாதியொருமை. அஃது பக்குவம் அடையாத உயிர்களைக் குறித்தது. பக்குவம் வாராதபடி தடுப்பது சூழ்நிலை. அஃது இங்கு மும்மலங்களைக் குறித்தது. இல்லம், அறிவர் இனம் இல்லாத, உலகர் இனம், `அவ்வினத்தை விட்டு அறிவர் இனத்தை ஒருவன் அடைந்தால், கட்டு நீங்குதற்குரிய நிலைமை உண்டாகி அறிவு முதிரப் பெற்று வீடு பெறலாம்; இல்லையேல் இயலாது` என்றபடி.மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. ``அம்மனை`` எனச்சுட்டிக் கூறினமையால், அரும்பு மனைக்குள்ளே இருத்தல் பெறப்பட்டது. அரும்பு, உயிருணர்வு. ``கட்டு விட்டு ஓடின்`` என்ற அனுவாதத்தால் கட்டு விட்டோடுதல் பெறப்பட்டது. `மலர்தல் நிலையில் காணலாம்` என்க. உம்மை சிறப்பு. ஈற்றடி, எதிர்மறை முகத்தலால் வலியுறுத்தியது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage