
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.
English Meaning:
Attaining Liberation in SahasraraSix1 the Birds in the house of Five2,
Hundred3 the birds at the top of Tree,
Having ascended the Seven 4 Steps high,
You shall sure reach the Home5
Tamil Meaning:
ஐந்து இல்லங்கள் உள்ளன. அந்த ஐந்திலும் ஆறு வாவல்கள் வாழ்கின்றன. ஐந்து இல்லங்களில் ஒன்றில் உள்ள ஒரு மரத்தின் நுனிக் கிளையில் நூறு வாவல்கள் வாழ்கின்றன. (இந்த இல்லங்களில் எப்படி நாம் குடியிருக்க முடியும்?) வாவல் முதலிய எந்த இடையூறும் இல்லாத வேறோர் இல்லம் உள்ளது. அது போகப் போக உயரமாய் உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஏறு நிலை முறையில் ஏழு பெரிய ஊர்களைக் கடந்தால், அந்த இல்லத்துட் புகலாம்.Special Remark:
ஆறு வாவல்கள், காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள். ஐந்து அகம், பஞ்ச கோசங்கள். அவை முன் தந்திரத் தொடக்கத்தில் காட்டப்பட்டன. மரம், பிராணமய கோசம், அதன் நுனிக்கிளை, புத்தி தத்துவம். நூறு வாவல்கள், புத்தி தத்துவத்தின் அளவிலாப் பாவங்கள். நூறு, அளவின்மையைக் குறித்தது. பெரும் பதி ஏழு, ஆதாரம் ஆறும், `நிராதாரம்` எனப்படும் சகச்சிராரமாகிய ஏழாம் தானமும். மனை, `மீதானம்` எனப்படும் துவாதசாந்தம். பிரணவ யோகத்தால் அதனையடைந்தோர் சிவனைச் சார்வர். மாறுதல், பின் விட்டு தீங்குதல். இது பிறப்பு எய்துதலைக் குறித்தது.` `பறவை`` எனப்பட்டன ஏற்புழிக் கோடலால் வாவலாயின. வாவல், இனத்தால் பறவையன்றாயினும், பறத்தல் பற்றி, `பறவை` எனப்படும்.
இதனால், `ஆதார யோக நிராதார யோகங்களில் நிற்பின், காமம் முதலிய அகப் பகைகளும், புத்தி குண பாவங்களும் நீங்கிச் சிவனைத் தலைப்படுதல் கூடும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage