
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.
English Meaning:
Kundalini Removes Obstacles to Reach SahasraraBeyond the Islet beyond to the Mountain on the Bank
They daily thrice journeyed,
To superintend the Field there,
She there is, who moves the Mountain obstacle within stands;
Her place we know not.
Tamil Meaning:
ஆற்றிடைக் குறை ஒன்று உள்ளது; அந்த ஆற்றின் அக்கரையில் மலை ஒன்று இருக்கின்றது. அந்த மலைமேல் நின்று தமது செயல்களைக் கண்காணிக்க நாள்தோறும், `காலை, மாலை, இரவு` என்பவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் போகின்றார்`; திரும்பி வருகின்றார். அவரது கண்காணிப்பை முதலில் சிறிது சிறிதாகவும், பின்பு முழுமையாகவும் தன்பால் ஈர்த்து, அவரை அந்த மலைக்குச் செல்லாதபடி தடுக்கின்ற ஒருத்தி அவரோடு கூடவே இருக்கின்றாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதை நாம் அறியமாட்டோம்.Special Remark:
``துருத்தி`` என்பது ஆற்றிடைக்குறை. கொல்லன் துருத்தி இரண்டையும் குறிக்கும் பலபொருள் ஒரு சொல்லாகலின், அது வெளிப்படைப் பொருளில் ஆற்றிடைக் குறையையும், குறிப்புப்பொருளில் கொல்லன் உலைத்துருத்தியையும் குறித்தது. கொல்லன் உலைத்துருத்தியாவது சுவாசத்தை வாங்கியும், விட்டும் நின்ற சுவாச கோசம். எனினும் அஃது, அதற்கு இடமாய் உள்ள உடல் முழுவதையும் குறித்தது. `உடல்` என்பது தலைக்குக்கீழ் உள்ள பகுதிக்கெல்லாம் பெயராய், மூலாதாரம், உந்தி, இருதயம், கண்டம் ஆகியவற்றைக் குறித்தது. எனவே, அக்கரையில் உள்ள மலையாவது புருவ நடு. அதுவே ஆன்மாவின் சாக்கிரத்தானம் ஆதலின் உயிர் தன் கருவி கரணங்களின் வாய்ப்பிற்கு றே்ப மூலாதாரத்தினின்று படிப்படியாக மேல் ஏறி வந்து தன் செயலைக் கண்காணிக்கும் இடமாயிற்று. ஆகவே, `போவார் ஆவார் உயிர்` என்பது விளங்கும். ``போவார்`` எனவே, `வருவார்` என்பதும் அமைந்தது. போதல் மேல் ஏறுதலையும், வருதல் கீழ் இறங்குதலையும் குறித்தன. இவை முறையே மேலாலவத்தை, கீழாலவத்தை எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.இனி மறதியை உண்டாக்குவது ஆணவ மலமேயாதலின், ``மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தி`` என்றது ஆணவ மலத்தையேயாம். ஆணவ மலம் வந்தவாறு அறியப்படாமையால், ``அவன் ஊரறி யோமே`` என்றார்.
விருத்தி - தொழில். வருத்தி - வருவித்து; தன்பால் ஈர்த்து.
இதனால், முன் தந்திரத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட மேலாலவத்தை கீழாலவத்தையின் இயல்புகள் உள்ளுறையாக உணர்த்தப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage