
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.
English Meaning:
The Perfect Ones Practice Yoga DailyLevel up Mind-Garden in equanimity
In devotion`s net, plant the cotton tree
By salvation`s rope enter the place of Three,
Daily do they ascend thus,
Who perfection filled are.
Tamil Meaning:
பயிரிடுதற்கு ஏற்புடைய ஒரு கொல்லையை, அதனுட்கிடக்கும் மேடு பள்ளங்களைச் சமன் செய்து, வரம்பு கோலி, வரிசை வரிசையாக வேலியைக்கட்டிப் பருத்தியை நான் பயிரிட் -டதனால், எங்கள் ஊரில் உள்ளவர்களில் மூவர் யான் கொண்டிருந்த உள்ள நட்பையே சூதாடு கருவியாகக் கொண்டு இடைவிடாது என்னுடன் சூத பொருது, இப்பொழுது அதை விட்டுவிட்டார்கள்.Special Remark:
`உழைத்துப் பொருள் தேட விரும்பாதவரே சூதாடு களத்தில் சென்று சேர்வார்கள். நான் பயிர் செய்ய முனைந்து விட்டமையால், அங்கு செல்லவில்லை. அவர்களும் என்னை அங்கு அழைக்கவில்லை` என்பதாம். ஒத்தல், கொல்லைக்கு ஆகுங்கால், பயிருக்கு ஏற்புடைய தன்மையும், மனத்திற்கு ஆகுங்கால் தவத்திற்கு இயையும் பான்மையையும் குறிக்கும். ``மணல்`` என்பதை `மண்+நல்` எனப் பிரித்து, `மண்` என்றதன் உள்ளுறை `மனத்தின் இயல்பு` என்பதாக் கொள்க. கொல்லை, மனம். மேடு - பள்ளம், வெறுப்பு, விருப்பு. `பத்தி - வரிை\\\\u2970?` என்பது வெளிப்பொருள். ``வலை`` என்பதற்கு `வேலி` என வெளிப்பொருள் கொள்ளாவிடில் மறை பொருட் கூற்றாகாது. `பருத்தி` என்பதை உள்ளுறைப் பொருட்டு, `தீ` என்பது குறுகி நின்றதாகக் கொண்டு பெரிய தீ, மூலாக்கினி` என உரைக்க. நிறுத்தல், நிலைப்படுத்துதல். ``முத்தம்`` என்பது முத்தங் கொடுத்தல் போன்ற மிக நெருங்கிய நட்பைக் குறிப்பதாய், வேற்றுமை யின்றி ஒன்றி இயைபை உணர்த்திற்று. மூவர், முக்குணம். நிரம்புதல் - தம் அளவில் தாம் நிற்றல்.இதனால், `வேண்டுதல், வேண்டாமையை விட்டு, சிவ பத்தியுடன் சிவயோகம் செய்தால், முக்குண விகாரங்கள் நீங்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage