
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.
English Meaning:
Yoga Way to LiberationOf three leagues is the Garden below,
Of half a league is the Forest above,
Frontiers blurring the two routes intermingled;
They who can see the Frontiers clear
Can quick cross the backyard
And reach the Hamlet safe.
Tamil Meaning:
இரண்டு வழிகள் தனித்தனியே பிரிந்து விளங்காமல் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வழி மூன்று காத தூரம் உள்ளது. அதிற் சென்றால், விளைவுள்ள கொல்லையை அடைந்து இன்புறலாம்.மற்றொரு வழி அரைக்காத தொலைவே உள்ளது. அது கருதி அதிற் சென்றால் அஃது இருள் அடர்ந்த காட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே, அவ்வழிகளில் முக்காத வழியை ஊன்றியுணர்ந்து கண்டு நடக்க வல்லவர் உளரானால், அவர் மேற்குறித்த கொல்லையை யேயன்றி, அதைக் கடந்துள்ள நல்லதோர் ஊரையும் விரைவில் அடையலாம்.
Special Remark:
முக்காத வழி தவ நெறி அதனைக் கடைபோகச் செல்லுதல் அரிதாதல் பற்றி, முக்காவதம் என்றார். கொல்லை, சிவலோகம், அதைக் கடந்த ஊர் பரமுத்தி நிலை.அரைக் காதவழி வினைவழி. அஃது எளிதாதல் பற்றி, ``அரைக் காதம்`` என்றார். எனவே, `இதிற்றான் பெரும்பாலோர் செல்வர்` என்பது விளங்கும்.
``செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்``
- திருக்குறள் - 26.
என்னும் திருக்குறளை இங்கு நினைவு கூர்க. காடு - பிறவிச் சூழல்.
முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
இதனால், உலகர் அவநெறி சென்று பிறவியை அடைய, பெரியோர் தவநெறி சென்று வீடு பெறுதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage