
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
English Meaning:
Kundalini Unites in SivaThe Kit1 and Parrot2 together beat the drum loud
The Shapely Virgin3 her wedding4 celebratd,
The Form of the holy Element she attained,
In that state, rapturous She remained.
Tamil Meaning:
கானக மக்களில் மங்கைப் பருவம் எய்திய மகளிர், உண்மை வாச்சியங்களில் ஏதும் இன்றிப் பருந்தும் பறவையும், ஓசை வேறுபட்டபோதிலும் அடிநிலையிசை ஒன்றேயாக முழக்குகின்ற ஓசைகளையே வாச்சியமாகக் கொண்டே எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளப்படுகின்றார்கள். அவர்கட்குப் பிறக்கின்ற பிள்ளை களும் பேயும், பூதமுமாகவே பிறக்கின்றன. ஆயினும் அவர்களில் யாரும் இதைப் பற்றி வருந்துவதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சி யுடனேயே வாழ்கின்றார்கள்.Special Remark:
`இது வியப்பு` என்பது குறிப்பெச்சம். உண்மை வாச்சியம் அருள் நாதம். பருந்து தீவினை. கிளி நல்வினை. இவை பறை கொட்டல், ஆரவாரத்தைத் தோற்றுவித்தல். அடிநிலையிசை. ஆணவ மலம். கானக மகளிர், கருவி கரணங்கள். அவர்கள் பருவம் அடைதல், ஒடுங்காது எழுச்சியுற்று நிற்றல். இவர்கட்குக் கணவராகும் கானவர், பெத்தான்மாக்கள். அதீதம் முதலாகச் சாக்கிரம் ஈறாக உள்ள கீழாலவத்தைகள். பிறக்கின்ற பிள்ளைகள், இவ்வவத்தைகளில் நிகழும் அனுபவங்கள். இவைகள் திருவருளை நினைய ஒட்டாது, மீட்டும் மீட்டும் வினைப்பயன்களையே நினைப்பித்தலால் அவை, `பேய் பூதம்` என இகழப்பட்டன. ஆயினும் அவைகளின் உண்மை உணராது மகிழ்ந்து வாழும் உயிர்களை, ``இன்புறுவாரே`` என்றார். ஏகாரம், தேற்றம்.``பருந்தும், கிளியும் படுபறை கொட்ட`` என்ற குறிப்பினால், மணம் கானவர் மணமாதல் அறியப்பட்டது. `பெறல் உரு, தவப் பெரும் பூதம் ஆகும்` என மாற்றிக்கொள்க. ``ஆகும், இன்புறுவார்`` என்பன போலவே, `படுவார்` என எதிர்காலமாக ஓதற்பாலதனையே வேறோ ராற்றால், ``பட்டார்`` என இறந்த காலமாக மயக்கிக் கூறினார். `இருந்த` என்னும் பெயரெச்சம் இடையே ஓர் இகரம் பெய்து விரிக்கப்பட்டது.
இதனால், முத்திறத்து ஐந்தவத்தைகளுள் சகல ஐந்தவத்தையும் கேவல ஐந்தவத்தையும் பயனிலவாதலை உணர்ந்து சுத்தாவத்தையிற் செல்லமாட்டாதவாறு இழிவு உள்ளுறையாக உணர்த்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage