
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.
English Meaning:
Kundalini Yoga Alone Drives Away Triple PasasIn the toddy measure1 of foul smell
That a derisive laugh draws and (senses) to shambles sends,
He placed the white rats2 three;
If on the fire3 placed, they run;
Else they remain;
Of flesh-born,
How will they ever go?
Tamil Meaning:
(சிலர் இனிய நகை முகங்காட்டித் தீங்கு விளைவித்தல் உண்டு; சிலர் அவ்வாறன்றிக் கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தல் உண்டு.) அவர்களில் பின்னர்க் கூறிய வகையைச் சார்ந்தவன் ஒருவன் கொங்கு நாட்டு உழக்கில் அடைத்து மூன்று வெள் ளெலிகளைக் கொணர்ந்தான். அவைகள் கொல்லனது உலை போல எரிகின்ற எரிக்கு அப்பால் இருப்பின், ஓடும்; இருக்கும்; இன்னும் பிற வற்றை யெல்லாம் செய்யும். ஆகவே, அவைகளை எரியில் இட்டால், இட்டவனுக்கு உணவாய் விடும். தொல்லை நீங்கும். எனவே, இழிந்த இனத்தவாகிய அவைகளை ஒழிப்பதற்கு வழி அதுவே.Special Remark:
கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தவன் சிவன். தீமை, திரிபுரத்தவர். விளைத்தவை குலைத்தற்கு, `தீமை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நிலைத்தல், வாழ்தல். ``வெள்ளெலி`` என்பதில் வெண்மை நிறம் குறித்ததன்று; வெற்ற வெளியைக் குறித்து இவைகளை `நாட்டெலி` என்றும், வீடுகளில் உள்ளவற்றை, `வீட்டெலி` என்றும் கூறுவர். நாட்டெலியே விளைவுச் சேதத்தை உண்டாக்குவன. `வெள்ளெலி மூன்று` என்றது. `புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக் கரணங்களை. அவையே புறப் புலன்களைப் பற்றிப் பல்வேறு விவகாரங்களை எய்துவன ஆகலின், அவற்றை, ``வெள்ளெலி`` என்றார். இனி, `மூன்றெலி முக்குணம்` என்பாரும் உளர். முக்குணங்கள் இங்ஙனம் காரியமாய்ப் பரிணமித்தன்றிச் செயற்படாமை யறிக. மாயையினின்றும் கருவி கரணங்கள் யாவும் சிவனது சங்கற்பத்தாலே தோன்றுதலின், அவன் இவ்வெலிகளைக் கொணர்ந்ததாகக் கூறினார். உழக்கு, ஒரு முகத்தலளவைக் கருவி. இங்கு அஃது உடம்பைக் குறித்தது. இன்னும் அதன் சிறுமையைக் குறித்தற்கு, ``கொங்குழக்கு`` என்றார். `கொங்கு நாட்டு அளவை அளவிற் குறைந்தன` என்பர். ``உலை`` என்றது, மூலாதாரத்தைக் குறித்துப் பின்னும் அதிலுள்ள அக்கினி எழுந்தோங்கிச் செல்லும் சுழுமுனா நாடியைக் குறித்தது. பிராண வாயு சுழுமுனா நாடியிற் செல்லாது, இடைகலை, பிங்கலை வழியிற் செல்லும், அந்தக் கரணங்களும் அவ்வுயிர்ப்போடு பொருந்திப் புறத்தே உலாவுதலை, ``உலைப்புறம் செல்லின் ஓடும்; இருக்கும் என்றார். அதினின்றே, `உலையகத்து அடங்கின் அடங்கி ஒடுங்கும், என்பது பெறப்பட்டது. புலை - கீழ்மை. கீழ்மையுடைய பொருளை, `கீழ்மை` என்றது உபசாரம். `கீழ்மையுடையது` என்றது, மூலப்பிரகிருதியை. அது தானே குணதத்துவமாகிச் சித்தமாய் நிற்றலால், சித்தம் இங்கு வேறு கூறப்படவில்லை. போதல் - அழிதல் ``போகின்றவாறு இது`` என ஒரு சொல் வருவித்து முடிக்க` வெள்ளெலியை உண்பவர் நெருப்பில் இட்டு உண்டல் பற்றி, `அவை போகின்றவாறு உலையில் இடுதலே` எனக் கூறினார்.இதனால், `அந்தக் கரணங்களில் அடங்கி ஒடுங்கிப் பயன் தருதல் வாசியோகத்தாலே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage