
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.
English Meaning:
Liberation only for Those who StriveStrewing the seed,
And applying manure in baskets full,
And ploughing with yoked bulls,
And digging out the weeds,
Thus producing rice,
And cooking in vessels big,
Gently should they consume it;
This they do not;
How then do they the sweet rice crop harvest,
Lying indifferent?
Tamil Meaning:
இங்கு, ``சோறு`` எனப்பட்டது வீடுபேறாதல் தெளிவாகலின், அதுபற்றி ஏனையவும் அதற்கு ஏற்பனவாக உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.Special Remark:
இடா - கூடை. இஃது எருவைக் கொண்டுபோய் நிலத்தில் இடுதற்குப் பயன்படும்; விதையை நிரப்பி எடுத்து விதைக்கவும் பயன்படும். எரு ஓரிடத்திலே சேர்ந்துவிடாமல் தூவுதல் வேண்டும். எனவே, `எருவை இடாக் கொண்டு தூவி இட்டு` என மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். எரு, ஞானத்தில் வேட்கை. இது, விதை, முளை, பயிர் எல்லா வற்றையும் செழிக்கச் செய்யும். விதை - ஞானம். முளை - அன்பு; பக்தி. ``வித்தினைத் தேடி முளையைக் கை விட்டவர்``3 என்றார் திருவுந்தியாரில். கிடாய் - ஆட்டுக் கிடாய். இஃது இளம் பயிரைக் கறித்துப் பாழாக்கிவிடும். `கடா` என்பது எருமைக் கடாவையும், `கிடாய்` என்பது ஆட்டுக்கிடாயையும் குறித்து வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு பயிரை அழிக்க வரும் மற்றை விலங்கு முதலியவற்றையும் கொள்க. `சுற்றம்` என்னும் தொல்பசுக் குழாங்கள்l ``கொண்டு பூட்டி`` என்றது, `பிடித்து ஓரிடத்திலே நிற்கும்படி கட்டிவிட்டு` என்றபடி. முளையைக் கிளறுத லாவது தடையிற்றி முளைத்தற்கும், பின் நன்கு வளர்வதற்கும் ஆவன செய்தல். அவை முளை நீர் வடித்தலும், முளைநீர் பாய்ச்சுதலும் போல்வன. அவை இங்குக் குருலிங்க சங்கமங்களைச் சிவனெனவே கண்டு வழிபடுதலைக் குறித்தன. மிடா, இங்குச் சோறு சமைக்கும் பானை. சிவபோகத்தை ஏற்கின்ற ஆன்ம உணர்வைக் குறித்தது. ``மெள்ள`` என்றது `சுவைத்து` என்றதாம். விழுங்கார் - உண்ண மாட்டாதவர். `இவை மாட்டாதவர் செந்நெல்லை அறுப்பதாகக் கூறிக்கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்` என்பதாம். அடர் - அடர்த்தல்; அறுத்தல். அஃது ஆகுபெயராய் அதற்குரிய கருவையைக் குறித்தது. அதன் உள்ளுறைப் பொருள் ஆன்மாவின் கிரியா சத்தி. ஈற்றில், `எங்ஙனம்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.இதனால், `ஞான வேட்கையும், அதன் வழியவாகிய ஞானம், பத்தி, பற்றறுதி என்பனவும் இல்லாதார் வீட்டு நெறியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளுதல் போலியே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage