
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.
English Meaning:
Yoga Leads to GraceWithin the shed1 where jackals2 howl,
Rouse your call3;
The binding Pasas to Fire4 Consign;
Thus spend days continuous;
Then the great Mother appears
And there in the home, you shall be well.
Tamil Meaning:
கூப்பிடு - கூப்பிடுதல்ஓ உரக்கக் கத்தி வெருட்டுதல். முதனிலைத் தொழிற்பெயர். அதனைச் சிறிதும் மதியாத குறுநரிகள் (குள்ள நரிகள்) ஐம்பொறிகள். அவைகட்கு இடமாய் உள்ள கொட்டகாரம் உடம்பு. யாப்பிடல், கட்டுதல். அஃது ``ஆப்பிடு`` என வந்தது. பாசம் - கயிறு. ``ஆப்பிடு பாசம்`` இறந்த கால வினைத் தொகை. கயிறு, வினை, அதில் உயிராகிய மகன் எப்படியோ அகப் பட்டுக் கொண்டான். அவன் அவ்விடத்திலேயே நெருப்பை உண்டாக்கி (சில புண்ணியங்களைச் செய்து) கயிற்றை எரித்துவிட்டுச் சிலநாள் உலாவியிருந்தான். அதை அறிந்து நன்றே அங்குப் புகுந்த மகள் ஒருத்தியின் துணை கிடைத்தமையால் (திரோதான சத்தி அருட்சத்தியாய்ப் பதிந்ததனால்) அந்தக் கொட்டகையை விட்டு வெளியேறி (உடம்பை விட்டு நீங்கி) நல்லதோர் இல்லத்தை (சிவத்தை) அடைந்து இன்பத்துடன் இருக்கின்றான்.Special Remark:
அவனைப்போல் மற்றவர்களும் ஏன் சிவ புண்ணியத்தைச் செய்து உய்த பெறுதல் கூடாது` என்பது குறிப் பெச்சம். `நலமாக` என ஆக்கம் வருவிக்க. `புகுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. தோன்றா எழுவாய் வருவிக்கப்பட்டது. பின்னிரண்டடிகள் இன எதுகை பெற்றன.இதனால், `வினைத்தொகையை நீங்கிச் சத்திநிபாதம் வருவித்துச் சிவனை அடைவிப்பன சிவபுண்ணியங்கனே` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage