
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.
English Meaning:
Lord in SahasraraIn the Water Above, the Lotus blossomed,
In the Water Below, the lily arose
To those who can see light in the Cross-beam above
The Lord is like a cool Watermelon,
That fruits even in regions low.
Tamil Meaning:
தட்டம் - ஆழம் இன்றிப் பரவலாகத் தேங்கியுள்ள நீர். குட்டம் - ஆழமாய்ச் சிறிது இடத்தில் நிற்கும் நீர்; குளத்து நீர் போல்வது முன்னதில் குவளையும், பின்னதில் தாமரையும் பூத்தல் இயல்பு. ஆயினும் இங்கு அவை மாறிக் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விரைந்து சென்று பறியாமல், பக்கத்தில் இருக்கும் மரக்கிளையில் சிறிது நேரம் யாரேனும் காத்திருப்பார்களாயின், இந்த முரண்பாட்டு நிலை நீங்குதல் தெரியவரும்.Special Remark:
தட்டத்து நீர் விரைவிற் காய்ந்து மறைந்து விடும். குட்டத்து நீர் நீடு நின்று பயன் தரும். ஆகவே, அவை முறையே உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் குறித்தன.தாமரை பெரு விருப்பினையும் குவளை சிறுவிருப்பினையும் குறித்தன. நிலையானதில் பெருவிருப்பும், நிலையாததில் சிறு விருப்பும் உண்டாதல் முறைமை. மெய்ப்பொருள் இயலில் இவை மாறி நிகழ்தலை முன் இரண்டடிகள் குறித்தன. இவை இயற்கைக்கு மாறாகலின் செயற்கையே. செயற்கை காரணம் உடைத்து. அஃது இங்கு ஆணவம். செயற்கை நிலையாதாகலின் ஆணவம் நீங்க இந்நிலை மாறித் தன்னியல்பு நிகழும். அதற்குச் சிறிது காலம் வேண்டும். அதனையே பன்னிரண்டடிகள் குறித்தன. பறித்தல், இங்கு அதனையே நிலையானதாகக் கருதுதல். விட்டமாவது, அதுபோலும் மரக்கிளை. விளங்குதல், அப்பால் செல்லாமல் காத்திருத்தல்.
கொம்மட்டி, ஒருவகைக்கொடி. அது நிலத்திற் படரும். ஆகவே, அதனை நீரில் இட்டால், அழுகிக் கெடும் ஆதலின், அது நிலையாமைக்கு உவமையாயிற்று. ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஆம்`` என்னும் பயனிலைக்கு, `அத்தன்மை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், உயிர்கட்குச் சிவானந்த வேட்கையே இயற்கையும், விடயானந்த வேட்கை செயற்கையும் ஆதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage