
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.
English Meaning:
Control of BreathTwo the picottahs1, seven the wells2;
The elder draws out3, the younger waters4;
If into field5 the water flows not,
And into waste flows6,
Verily is it like the fowl
That the harlot rears.
Tamil Meaning:
(`ஏத்தம்` என்பதுதான் நீர் இறைக்கும் ஏத்தத்தின் பெயர். அஃது அறியாதார் `ஏற்றம்` என்பர்.) ஏத்தம் இரண்டு - இடை நாடி, பிங்கல நாடி. ஏழு தூவு - ஆறு ஆதாரங்களும், சகஸ்ராரமும், (துரவு - கிணறு) மூத்தோன் - `அகங்காரம்` என்னும் அந்தக் கரணம். இதுவே பிராணவாயுவை இயக்குவது. இளையான் - `மனம்` என்னும் அந்தக் கரணம். (பிராண வாயு இயங்குதலாலே உயிர் அறிவு பெற்று விளங்குகின்றது. அந்த அறிவை நீராகவும், அந்த அறிவு நிற்கும் இடங்களைத் துரவாகவும் பிராண வாயுவின் இயக்கத்தால் உயிரின் அறிவு பிரவர்த்திக்கச் செய்யும் செயலை நீரைப் பயன்படுத்த இறைப்ப தாகவும், அறிவு மனத்தின் வழியே சென்று பயன் விளைத்தலின் மனத்தை நீரை வேண்டும் இடத்திற்குக் கொண்டுபோய்ப் பாய்ச்சுபவ னாகவும் கூறினார். உயிர்க்கு அறிவை உண்டாக்கும் கருவியை நீர் இறைக்கும் மூத்த சகோதரனாகவும், அறிவைக் கொண்டு போய்ப் பயன் படுத்தும் கருவையை, நீரை வேண்டுமிடத்தில் பாய்ச்சும் இளைய சகோதரனாகவும் கூறினார்.) பிராண வாயு நடு நாடியாகிய சுழுமுனையில் சென்றால், ஞானமாகிய பயன் விளையும். அதனால் அதனை, ``பாத்தி`` என்றார். பிராண வாயுவை மனம் சுழுமுனையிற் செலுத்தாது வெளியில் செலுத்தி, அஞ்ஞானமே விளையப் பண்ணுதலால் மூத்தோன் ஓர் ஏத்தத்தின் வழியாக (இடைகலை வழியாக) நீரைத் துரவுக்குத் தந்து மற்றோர் ஏத்தத்தின் வழியாக (பிங்கலை வழியாக) வெளியேற்ற, `அந்நீர் பாத்தியிற் பாயாது, பாழ் நிலத்தில் பாய்கின்றது` என்றார்.Special Remark:
``பழியுடை ஆக்கை தன்னில், பாழுக்கே நீர் இறைத்து``*என அப்பர் பெருமானும்,
``ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ கால மெலாம்
பாழுக் கிறைத்தேன்``8
என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தனர்.
கூத்தாடும் ஆடவன் `கூத்தன்` எனப்படுதல்போல கூத்தாடும் மகள் `கூத்தி` எனப்படுகின்றாள். இங்குக் குறிக்கப்பெறுகின்ற இக்கூத்து, அவிநயக் கூத்து. இதனைப் பழங்காலத்தில் விறலியர் (பாணத்திகள்) ஆடியபோதிலும், பிற்காலத்தில் இது விலைமாதர்க்கே உரியதாய் விட்டது. கோழியைப் பெரிதாக வளர்த்தற்கு மிகத் தொல்லை உண்டு. கூத்தி அத்தொல்லைகளுக்கு உள்ளாகிக் கோழியை வளர்ப்பது, பெரும் -பாலும் தனக்காக அன்றித் தனக்கு விலை கொடுத்துத் தன்னிடம் வருகின்ற விடர்கள் மகிழ்ச்சியடைய அவர்கட்கு ஆக்குதற் பொருட்டேயாம். ஆகவே, கூத்தி வளர்க்கும் கோழிகள் அவளையும், அவள் வாயிலாகப் பலரையும் தீநெறியிற் செல்ல ஊக்குவிப்பனவே யாகும். அது பற்றி உலகியலிலே ஊக்கம் பிறப்பிக்கின்ற பிராண வாயுவை, ``கூத்தி வளர்த்த கோழிப்புள்`` என்றார்.
இதனால், `மக்களத் தமது மூச்சினை வாயியோகமாக்கினால் பயன் மிகவிளையும்; அதைச் செய்யாது வீணடிக்கின்றனர் என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage