
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.
English Meaning:
Attaining the Triple Turiya StatesThe seed for future ripened
The seed ripened over quite a stretch,
For those whom the seed ripened in states three1
The three spaces2 above, too, ripened.
Tamil Meaning:
உயிர்களாகிய உழவர்களுக்கு இம்மைக் காலம் முடிவதற்குள்ளே மறுமை தோன்றுதற்கு விதை விளைந்து கிடக்கின்றது. அஃது `ஆகாமியம்` என்னும் வினையாம். பிராரத்தத்தின் பயன் விளையும் பொழுது அதுபற்றி மகிழ்ச்சியோ, வருத்தமோ கொள்ளாது ஒட்டின்றிருப்போருக்கு ஆகாமியம் தோன்றாது. மகிழ்ச்சி வருத்தங்களால் அதில் அழுந்துகின்றவர்கட்கு அவை பற்றி நிகழும் முயற்சிகள் ஆகாமியமாய்த் தோன்றிச் சஞ்சிதமாய் நிலைபெறும்.) இம்மை முடிவெய்தப் பெற்ற உயிர் மறுமையில் செல்லும் இடம் இந்நிலம். சுவர்க்க லோகம், நரக லோகம் என்பன ஆதலாலும், அவற்றிடையே உள்ள தொலைவு வேறுபட்டன ஆதலாலும் `இந்த உயிர் இன்ன இடத்தில் செல்லும்` என்னும் வரையறையும் அஃது இங்குச் செய்த வினையால் வரையறுக்கப் படுதலை, ``மேலைக்குக் காதம் விளைந்து கிடந்தது`` என்றார். காதம் - வழியளவு. இப்படி, `முன் விளைந்ததிலிருந்து பின் விளைவு; பின்பு அதிலிருந்து பின் விளைவு என்று விளைவு இடைவிடாது தொடர்ந்து கொண்டே போவதால். அந்த வினையின் பயனைக் கொள்கின்ற உயிர்களுக்கு அவை மாறி மாறிச் செல்லும் மூன்று உலகங்களும் `இது` என்பது முன்னதாகவே வரையறுக்கப்படுகின்றன.Special Remark:
`ஆகையால் அலைவு நீங்கி, அமைதியுற வேண்டுவார் பின் விளைவு தோன்றாதபடி பார்த்துக் கொள்க` என்பது குறிப் பெச்சம். பின் விளைவு தோன்றாமைக்கு வழி மேற்குறிக்கப்பட்டது. அடுக்கு, இடைவிடாமை குறித்து நின்றது. முக் காதம் - மூன்று வழிகளின் அளவு. சொற் பொருட் பின்வரு நிலையண் வந்தது.இதனால், `பிறவிக்கு வித்தாகிய ஆகாமியத்திற்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை விடுதல் வேண்டும்` என்பது குறிப்பால் அறிவுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage