
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.
English Meaning:
Uniqueness of Ambrosial Flow in CraniumGreen that Land, yet no water flows,
None know it ever;
The Water that flows rain devoid
Stands not in Land untilled.
Tamil Meaning:
வயல்கள் யாவும் மேல் நீர் வந்து பாயவே பயிர்களை யுடையவாகும். ஆயினும் ஒரு வயல், மேல் நீர் வந்து பாயாமல் உள்ளிருந்தே ஊறும் நீரை உடையதாய்ப் பயிரை உடைய தாகும். அந்த வயலை அறிபவர் ஒருவரும் இல்லை. (அதனால் அவர்கள் வானத்தை நோக்கியிருந்து, `பஞ்சம், பஞ்சம்` என்கின் றார்கள்.) மேற் குறித்த வயலில் வானம் எதுவும், எப்பொழுதும் பொழிதல் இல்லை. இனி மழை நீரில் தன்மையை ஆராயுமிடத்து, அது `மேட்டில் ஏறாது` என்பது தெளிவு. (அதனால் பெய்கின்ற மழை நீரும் அந்த வயலில் ஏறிப் பாய்வதில்லை. ஆகவே, `மழையால் விளையும், மழையின்மையால் பஞ்சமும், என்கின்ற நிலை அந்த வயலிடத்தில் இல்லை.)Special Remark:
அந்த அதிசய வயலாவது சிவம். அதில் விளைவன எல்லாம் அதன் அருளாலே. ஆகவே, அந்த அருள் உள்ளிருந்தே ஊறும் நீராயிற்று.மற்றை வயல்கள் உயிர்கள். அந்த வயல்களுக்கு ஆணவ மாகிய வானத்தில், மாயையாகிய மேகம் தோன்றி, கன்மமாகிய மழையைப் பொழியவே நன்செய்ப் பயிர்களும், புன்செய்ப் பயிர்களும் உளவாகும். இந்த மழை நீர் மேற்குறித்த அந்த மேட்டு வயலில் ஏறமாட்டாது. ஆகவே, இந்த மழை வளம்படுதலாலோ, வறட்சியடைதலாலோ அந்த வயலுக்கு வருவதொன்றில்லை.
``இந்த அரிய செய்தியை அறிந்து கொண்டு அந்த வயலை அடைந்து வாழ அரியாதவர்களாய், உலகர் அல்லல் உறுகின்றார்கள்` என்பதாம்.
பாய்தல் - இங்கு, மேல் எழுந்து பாய்தல்; ஊறுதல். நிலம் - வயல். ``பச்ை\\\\u2970?``, ஆகுபெயராய்ப் பயிர்களைக் குறித்தது. இங்கு முத்தான்மாக்காளைக் கொள்க.
படர்தல் - உள்ளது சிறத்தல். அஃது ஆவி மேகமாய், மேகம் மழையாதலால். `அங்குப் பொழியாது` என ஒருசொல் வருவிக்க. புனல், அதன் தன்மையைக் குறித்த ஆகுபெயர். இந்நீர்மை - இந்த நீரின் தன்மை. திடரில் நில்லாமையைக் கிளந்து கூறியது. `இந்நீர் அவ்வயிலில் செல்லாது` என்பதைப் பெறுவித்தற்கு.
இதனால், `பாசங்களால் விளையும் பயன்களை விரும்பாது விடுத்து, பதியால் விளையும் பயன்களை விரும்பி, அதனையடைய முயலல் வேண்டும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage