
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.
English Meaning:
Light Dawns in SahasraraWithin they Bathing Well1,
Where the water draw
The roundly Earth swells
And Water springs2;
Bind your breath3 and with Rope — Work
And centre your thoughts;
Well may the Light Divine dawn.
Tamil Meaning:
[`அனம்` என்பது ``வட்டனம்`` என்பதில் பண்புப் பெயர் விகுதியாகவும், ஏனைய மூன்றிலும் தொழிற்பெயர் விகுதியாகவும் வந்துள்ளது. `கட்டு` என்பது அடியாக. `கட்டணம், கட்டடம்` என்னும் சொற்கள் இக்காலத்தில் வழங்கக் காண்கின்றோம். இங்கும் `அனம்` என்பதற்கு ஈடாக, `அணம்` என்ற பாட வேறுபாடும் காணப்படுகின்றது. கூலிக் நெற்குற்றுதலை, `கொட்டணம் குற்றுதல்` என்பர். எனவே, இம்மந்திரத்தின் முதற்சீர் நான்கும் முறையே, `கொட்டுதல், வட்டம், கட்டுதல், ஒட்டுதல்` என்னும் பொருளவாம். கொட்டுதல் - நிலத்தைத் தோண்டுதல்.]நிலத்தைத் தோண்டி, மண் அல்லது மணலை அப்பால் குவிக்கின்ற கிணற்றில், அல்லது ஊற்றுக்குழியில் நீரோடு, சுற்றிலும் மண், அல்லது மணலும் உடன் சேர்ந்துவரும். அந்நீர் கலங்கல் நீராய் இருக்கும். மரத்தாலான வட்டத்தின் மேல் சுடுமட் பலகைகளால் ஓரளவு சுவர் எழுப்பி, அதனைக் கயிற்றால் இறுகக் கட்டிப் புறஞ்சுவரோடு ஒட்டிவைத்தால், மண், அல்லது மணல் வாராது, நீர் மட்டுமே ஊறி வந்து தெளிந்து எல்லார்க்கும் பயன்படும்.
Special Remark:
கிணறு தோண்டி, அதனை இடிந்து வீழாமல் நிலைக்கச் செய்தற்கும் இன்றும் இவ்வாறு செய்யப்படுதலைக் காணலாம். இஃது இங்கு நிலத்தை அகழ்ந்து, அதன் அடியில் உள்ள நீரைபபெற்று இன்புறுவார்க்குச் சுற்றிலும் உள்ள மண், அல்லது மணல் ஆகிய கலங்கல் வந்து சேர்வதுபோல, ஞான சாதனைகளால் அஞ்ஞானத்தை அகழ்ந்தெறிந்து தோன்றாத் துணையாய் நின்று சிவத்தைத் தலைப் பட்டு இன்புறுபவர்கட்குச் சிவானந்தத்துடன், பிராரத்த வாசனையும் வந்து தாக்கும். அதனைத் திருவருளாகிய பாதுகாவலைப் பத்தியால் உறுதிப்படச் செய்யின் சிவானந்தமே மேலிட்டு யாவர்க்கும் பயன்தரும், என்பதைக் குறித்து நின்றது.``தொழுமி`` என்பதும், `கட்டி` என்னும் பொருட்டாய் நின்றது இவையெல்லாம் சில நாட்டு வழக்குப்போலும்!.
(இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் இரு மந்திரங்கள் வெளிப்படைப் பொருள் ஆகலின், பின் அதிகாரத்தில் இருத்தற்குரியன.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage