
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.
English Meaning:
Lord is Hidden Deep WithinIn the Tank1 where Reeds2 flourished,
In Creepers3 spread and entwined filled,
The Lord is not like the stork that on them gently walks
Deep into the Rocky Floor, He dives
For Jiva`s redemption to grant.
Tamil Meaning:
இயல்பாகவே வலிய கோரைப் புற்கள் முளைத்துப் படர்ந்து கிடக்கின்ற ஒரு குளத்தில், அதற்கு மேல் மெல்லிய ஆரைக் கொடிகளும் தொடர்ந்து படர்ந்துவிட்டன. இந்நிலையில் அந்தக் குளத்தை உடைய நல்ல தலைவர் ஒருவர், அதில் நாரைகள் மூழ்குவதுபோலத் தரையளவும் செல்ல மூழ்குவது எங்ஙனம்?Special Remark:
`இயலாததாய் உள்ளது` என்பதாம். குளம், சீவான்மா, அதன் அறிவு அக்குளத்தின் நீர், வலிய கோரை ஆணவ மலம். அதன் மேல் தொடர்ந்து படர்ந்த ஆரைக் கொடிகள் மாயையும், கன்மமும், குளத்தை உடைய நாதனார், பரமான்வாகிய சிவன். நாதனார் குளத்து நீரில் தரையளவும் செல்ல முழுகுதல், சிவன் சீவான்மாவின் அறிவு முழுதும் பற்றி விளங்குதல். இஃது இயற்கையாயினும் ஆணவ மலம் காரணமாகச் செயற்கையாய்ப் புதிதாக விளங்குதல்போலக் கூறப்பட்டது. ``நாரைபோல்` என்பது இடைக்கண் போந்த உவமை. ``நாரை`` என்றது நீர்மூழ்கும் பறவைகளைக் குறித்த குறிப்பு மொழி. ``பாரை`` என்னும் இரண்டன் உருபை `பார்க்கண்` என ஏழாவதாகத் திரித்துக் கொள்க. படிதல் - மூழ்குதல் `படிகின்றவாறு எங்ஙனம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.இதனால், `வலிய மூல மலமாகிய ஆணவ பந்தமும், அதற்கு மேல் ஆகந்துக மலங்கலாகிய மாயா கன்ம பந்தங்களும் உள்ள வரையில் சிவ விளக்கம் சீவ போதத்தில் முழுமையாக உண்டாதல் இயலாது` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage