
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.
English Meaning:
Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Nalapari PakamPig and Snake, Cow and Monkey
Together were in the lowly Jackal herd;
Joining them not and debasing himself not,
When, in balance, deeds good and bad are equal weighed
The Jiva, tinier that crab`s-eye berry,
Its ego`s diminution saw.
Tamil Meaning:
ஒரு குறு நரிக் கூட்டத்திற்குள்ளே, பன்றி, பாம்பு, பசு, குரங்கு இவைகளும் நிறைந்துள்ளன. அவைகளின் இயல்பை முற்றவும், துலாக்கோலில் இட்டு நிறுப்பது போல நுட்பமாக ஆராய்ந்து உணர்ந்தால் அவற்றால் விளையும் துன்பங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்கும் நிலை உண்டாகும்.Special Remark:
குறுநரிகள், சகல வருக்கத்து ஆன்மாக்கள். பிரளயாகலர் விஞ்ஞான கலர்கள் பெரு நரிகள். நரி தந்திரம் உடையது ஆதலின் அது அறிவுடைய - சிற்றறிவுடைய ஆன்மாக்கட்கு உவமையாயிற்று.பன்றி, பாம்பு, பசு இவை முறையே தாமத, இராசத, சாத்துவிக குணங்கள். குரங்கு, மனம், முசு, வானரம், இரு பெயர் ஒட்டு. தராசில் இட்டு நிறுத்தல் தத்துவ ஆராய்ச்சியை நுண்ணிதாகச் செய்தல்.
`குன்றியளவாக` என ஆக்கம் வருவித்து, `குன்றி குன்றியாக` என உரைக்க. குன்றி - குன்றிமணி. நிறை, பன்றி முதலியவற்றின் வலிமை. `குறைக்கின்ற ஆறு உளதாம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
`தெற்றி` என்பது மெலிந்து நின்றது. கிடந்த - கிடந்தன. தெற்றிக் கிடத்தல் - நெருங்கிக் கிடத்தல்.
இதனால், தத்துவ ஆராய்ச்சியே பந்த நீக்கத்திற்கு வழியாதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage