
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.
English Meaning:
Kundalini YogaSix are the streets
In their junction are juicy palm trees four;
With ladder difficult to climb,
I ascended the palm`s heights;
And there I saw the seas seven.
Tamil Meaning:
ஆறு தெருக்கள் - அறிவினால் மிக்க அறு சமயங்கள். அவை அனைத்தும் சந்திக்கின்ற சந்தியிடம் - பக்குவான்மா. அதற்கு வீடு பேறாகிய சாற்றைத் தருவனவாய் முறைப்பட மேட்டு நிலத்தில் உயர்ந்து உயர்ந்து நிற்கும் நான்கு பனை மரங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆறு தெருவில் செல்பவர்களில் யாரும் அந்தப் பனை மரங்களில் ஒன்றிலேனும் ஏற இயலாது. அவற்றை விடுத்துச் சிவ குருவினை அருளால் சிவ நெறியை அடைந்தோரே அவற்றில் ஏற இயலும் ஆகையால், அந்தச் சிவநெறியே அந்தப் பனைமரங்களில் ஏறுதற்கு அரிதல் கிடைக்கும் ஏணி. அந்த ஏணி வழியாக நான் அவற்றில் முறையாக ஏறினேன். ஏறியவுடன் எழுவகைப் பிறவியாகிய கடல்கள் ஏழினது கரையையும் கண்டுகொண்டேன்.Special Remark:
`நாட்டில் வாழ்பவர்கள் கடற்கரையை அங்கிருந்தே காண வேண்டுமாயின் உயர்ந்த பனைமரத்தின்மேல் ஏறிக் காண வேண்டும். அதுபோலப் பிறவிக் கடலின் கரையை உலகியலில் நின்றே காணவேண்டுமாயின் மிக மேட்டு நிலத்தில் உள்ள ஞானமாகிய பனை மரத்தின்மேல் ஏறிக் காணவேண்டும். அதை அந்த மேட்டு நிலத்தில் சென்று அடைவதற்கு அதற்குக் கீழே கீழே `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்று பனை மரங்கள் உள்ளன. அவற்றில் முதலில் உள்ள `சரியை` என்னும் பனை மரம் முதலாக முறையே ஏறிச் சென்று, ஞானமாகிய பனை மரத்தை அடைந்து அதில் ஏறி நான் பிறவியாகிய ஏழு கடல்களை நான் கண்டுவிட்டேன்` என்கின்றார் நாயனார்.`ஆறு தெருக்கள் சந்திக்கின்ற சந்திப்பை அடைந்த ஒருவன். தான் குறித்த மேலிடத்தை அடைதற்கு எந்தத் தெரு வழியாகச் செல்வது என்று திகைப்பான். அப்பொழுது அருளும், அறிவும் உடையான் ஒருவன், `இவைகளில் எதன் வழியாகவும் செல்லாமல், இதோ தெரிகின்ற இந்த பனைமரங்கள் வழியாக முறையே ஏறிச் சென்று அடைக` எனக் கூறி உதவி செய்தாற்போல ஆறு சமயங்களைக் கண்டு திகைத்த எனக்கு எங்கள் நந்தி பெருமான் வழிகாட்டினார் என்றபடி.
பனைமரத்தில் ஏறி இளைத்தவர்கட்கு ஓர் ஆறுதலாகக் கிடைப்பது அம்மரத்தின் சாறு. அதனை, `பத நீ` என்பர். அது போலச் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன் சாலோக சாமீப சாரூபங்களாகிய பத முத்திகளும் ஞானத்தில் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன்கள் அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி` - என்னும் அபர முத்திகளுமாம் ஆதலின் அவற்றைக் குறித்தற்கு, ``சாறு படுவன நான்கு பனை`` என்றார்.
இதனால், `ஒன்றோடொன்றொவ்வாத சமயங்களின் வழிச்செல்லாது, சித்தாந்த சைவ நெறியைச் சிவ குருவழியாக அறிந்து, அதில் சரியை, கிரியை, யோகங்களில் வழி ஞானத்தை அடைந்து, அது வழியாகச் சிவப்பேற்றினைப் பெறுதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage