
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
English Meaning:
Sublimate Bindu Within into Para BinduIn the eroding seed bed
Of Sorrow`s field,
Train the flowing water
And dam it tight;
Then plough with the good young bull,
And transplant the cucumber seedling;
That shall indeed into good seed ripe.
Tamil Meaning:
நெற்கதிரை அரி அரியாகக் கொள்ளும்படி மிக விளையக்கூடிய நல்ல வயலைப் புல்லும், பூடுகளும் ஆகிய களையைத் தந்து துன்பம் விளைக்கின்ற கழனியாக மாற்றுகின்ற ஒழுக்கலை உறுதியாக அடைத்து, உழும்பொழுதே பாலைப் பொழிந்து கொண்டு போகின்ற வலிய பசுக்களைப் பூட்டி உழுதலா, படர்ந்து செல்கின்ற வெல்ளரி விதையும் செந்நெல் விதையாய்ச் சிறந்த பயனைத் தரும்.Special Remark:
அரித்தல் - அரி அரியாகச் சேர்த்தல். நாற்று உள்ள இடமே `நாற்றங்கால்` எனப்படுமாயினும், ``அரிக்கின்ற`` என்னும் அடைமொழியால் அது நாற்றுக்களை நட்ட வயலைக் குறித்தது. நெல் வயலில் நீர் நீர் எப்பொழுதும் நிரம்பி நின்றால்தான் நெற்பயிர் வளர்ந்து பயன் தரும். அத்தகைய நீர் தேங்கி நில்லாமல், உழுபவனும் காணாதபடி வரம்புகளுக்குள்ளே சிறு துளைகளால் வெளியேறி விடுவதுண்டு. அத்துளைகளை `மோழை` என்பர். நீர் தங்காது போய் விட்டால், பயிர் வளராது; களைகள் வளர்ந்து விடும். நீரை இங்கு ``ஓட்டம்`` என்றார். ``நாற்றங்கால்`` என்றும், ``கழனி`` என்றும் கூறப்பட்டது உடம்பு. `கழனியாக` என ஆக்கம் விரிக்க. நீர், உடல் வலிமை. உடல் வலிமையுடன் நலம் பெற்றிருந்தால்தான், கற்பன கற்றுக் கேட்டுச் சிந்தித்து அறிவு பெறுதல் இயலும். இல்லையேல் பிணி பல நலிய, மூப்பும் விரைவில் வரும். இயல்பான மூச்சுக்காற்று வெளிச் செல்லும்பொழுது பன்னிரண்டங் குலம் வெளியேறப் பின்பு எட்டங்குலமே உட்புகுகின்றது. இவ்வாற்றால் உடல் வலிமை கணந்தோறும் இழக்கப்படுகின்றது. அதனைத் தடுத்து நிறுத்தினால் உடல் வலிமை பெற்றுத் திகழும். அதனையே, ``சிக்கெனக் கட்டி`` என்றார். வரித்தல் - விரும்பிக் கொள்ளுதல். நன்மை, இங்கு உடல் நலத்தைக் குறித்தது. ``மேல் காற்றுப் பசுக்கள்`` என்றற்கு ஏற்ப. இங்கு ``ஆன் கறவை`` என்றார். விரித்தல் - படரும் கொடிகளைத் தருதல். வெள்ளரி வித்து, சுக்கிலம். உம்மை இழிவு சிறப்பு. அதனால், பின் வந்த விந்து நெல்வித்தாயிற்று. யோகிகட்கு விந்து சயம் வந்து பயன் தருதல் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.இதனால், `மக்கள் வீணே மாய்ந்தொழியாது. யோகம் பயின்று பயன் பெறவேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage