
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.
English Meaning:
Body Perishes if Yoga is not PractisedFrom the Bamboo Shoot arose a Margosa tree
Close on Margosa was a Palmyrah,
In that Palm is a Snake
Knowing not to drive that Snake and eat it,
The Margosa tree withered away.
Tamil Meaning:
முளை, நிலத்தளவில் நிற்பதாகலின், அது அடி நிலத்தில் உள்ள மூலாதாரத்தைக் குறித்தது. சுவாசம் எழுதற்கு வழியை உடைத்தாய் இருத்தலின் அம்முளை உள்துளையை உடைய ``மூங்கில்`` எனப்பட்டது. வேம்பு, நல்லதொரு மருந்து ஆதலின், காய சித்தியைத் தருவதாகிய சுவாசமே ``வேம்பு`` எனப்பட்டது. அந்த வேம்பு மேற்கூறிய மூங்கில் முளையினின்றும் எழுவதாதலை அறிக. பனை, சுழுமுனா நாடி. அதனையே சுவாசம் சார்ந்திருப்பினும், ஒற்றுமைபற்றிச் சுழுமுனை சுவாசத்தைச் சார்ந்திருப்பதாக வைத்து, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனை`` என்றார். கிடந்த பனை என்ற அனுவாதத்தால், `வேம்பினைச் சார்ந்து பனை கிடந்தது` என்பதும் பெறப்பட்டது. குண்டலி சத்தி சுழுமுனையைப் பற்றியிருப்பது ஆகலின் அதனை, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்புண்டு`` என்றார். அந்த பாம்பு நன்கு துயின்று கொண் டிருப்பதால், அதனோடு பனையைப் பற்றியிருக்கின்ற வேம்பினைத் தின்றல் கூடாததாய் உள்ளது. அந்தப் பாம்பினை எழுப்பி விலகச் செய்தால் வேம்பினைத் தின்ன முடியும். அதனைச் செய்ய வல்லவர் இல்லை. அதனால் வேம்பு வீணே வற்றி வெடித்துப் போகின்றது.Special Remark:
`குண்டலி சத்தி துயில்வதால், நல்லுணர்வு உண்டாகவில்லை. ஆகவே, அதனை எழுப்பினால், நல்லுணர்வு உண்டாகும்; யோகம் பயில முடியும். அவ்வாறு செய்வார் இல்லாமையால், சுவாசம் வீணாய் அழிகின்றது` என்பதாம். துரத்துதல், இங்கு எழுப்பி இயங்கச் செய்தலைக் குறித்தது. `வெடிக்கின்றவாறு இரங்கத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.இதனால் யோகத்தைப் பற்றாத உலகர் நிலைக்கு இரங்குதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage