
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.
English Meaning:
Vision Siva and Attain Golden FormThey who saw the Fish1, remain looking at the fish;
They who saw the Hare2 , are of the Three3 rid;
He who controlled the battle4 turmultuous,
See the Hidden Truth5 ,
His form golden becomes.
Tamil Meaning:
குளத்தில் கயல் மீன்களில் ஒவ்வொன்றை அதன் துள்ளல், பிறழ்ச்சி முதலியவற்றின் கவர்ச்சியால் கண்டு மயங்கினோர் அதைக் கண்டுகொண்டிருப்பதோடே ஒழிவர். (இஃது, `உலகத்தில் மாயையின் விசித்திரத்தில் மயங்கினோர் அம்மயங்குதலோடே ஒழிவர்` என்பதைக் குறித்தது.)கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது,
``மறை`` என்பது சிலேடையாய், காட்டுப் புதர் மறைவையும், வேதத்தையும் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள். `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின் வழி நில்லாதாரைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள் `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின்வழி நில்லாதாரைக் குறித்தது.
``பிறருக்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார்,
தமக்குப் பயன்வே றுடையார்; ... ... ...
... ... ... தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்`` *
என்றார் குமரகுருபரரும். பூசல் - ஆரவாரம்.
Special Remark:
``ஓதி யுணர்ந்து, பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் - பேதையிற் பேதையார் இல்``l என்றபடியுள்ள வாய்ப்பறை சாற்று வானது இழிவு நோக்கி ஒருமையாற் கூறினார். அம்மூன்றாம் அடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. உலக நெறி பிறவி நெறியாகலின் அதனைக் குளமாகவும், தவநெறி வீட்டு நெறியாகலின் அதனை நிலமாகவும் கூறினார். இதில் ஈரடி எதுகை வந்தது.இதனால் உலக நெறியில் நிற்பார் உலக இன்பத்தையும், தவநெறியில் நிற்பார் வீட்டின்பத்தையும் பெறுதலும், யாதொரு நெறியிலும் நில்லாது வாய்ப்பறை சாற்றுவார் யாதும் எய்தாமையும் உடன் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage