
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.
English Meaning:
Goal of Jiva is to Seek LiberationThe mating Brid1 pecked at food2
And approaching its partner fed it
Like it easy is the Goal to reach
For those who eat of Ghee3 in the melting Fire4 within
And away the Darkness5 drive.
Tamil Meaning:
கூட்டில் வாழும் பறவை இரையைத் தேடித் தின்று விட்டுக் கூட்டிற்குள் புகுந்து பின் அதனைச் சீரணிக்கப் பண்ணிக் கொண்டுமட்டும் இருந்தால், அந்தப் பறவை தனக்கு என்ன உறுதிப் பயனைச் செய்துகொள்ளும்? (ஒன்றையும் செய்து கொள்ளாது. ஆகலின் தம் உயிர்க்கு உறுதி செய்துகொள்ள விரும்புவோர் அந்தப் பறவையின் செயலைக் கைக்கொள்ளாமல் விடுத்து,) நெய்யை உணவாக உண்டு அதனாலே ஓங்கி எரிகின்ற நெருப்புப் பின் நறுமணமும், குளிர்மையும், அழகையும் உடைய சாந்தத் தருகின்ற அந்த மேலான செயலை நோக்கி, அதனைக் கடைப்பிடிக்க.Special Remark:
`கூட்டுப் பறவை` என்னும் பகர ஒற்று, எதுகை நோக்கித் தொக்கப்பட்டது. `மற்று`, வினைமாற்றின் கண் வந்தது. அறுதல் - சீரணித்தல். ``அற்றால் அளவறிந்துண்க``8 என்பது காண்க. அறுத்தல் - சீரணிக்கப்பண்ணுதல். சீரணித்தல் இயல்பிலே நிகழ்வ தாயினும் அது தவிரப் பிறிது செய்யாமையைக் குறித்தற்கு, அதனைப் பரவையால் செய்யப்படுவதுபோலக் கூறினார். உணவை உண்டு அதனைச் சீரணித்துக் கொள்வதனோடு அமைகின்ற உயிர்கள் பல உள ஆயினும் கூட்டில் வாழும் பறவையையே கூறினார், அஃது உடம்பில் வாழும் உயிரைக் குறித்தற்கு, `கூடு` என்பது உடம்பிற்கும் பெயர். அதனை, ``கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு ஆரே அனுப விப்பார் - பாவிகாள் அந்தப் பணம்``9என்பதனானும் அறிக. `சுடு` என்பது எதுகை நோக்கி நீண்டமையால் ஈற்றுகரம் குற்றுகரமாய் உயிர் வரக்கெட்டது. `சுடு எரி` முக்கால வினைத்தொகை. நெய்யை உண்டு, மையைக்காலும் எரி, விளக்கெரியும், ஓம குணடத்து எரியும். பாடு - உயர்வு; மேன்மை. ``அறிவார்க்குப் பன் எளிதாமே`` என்றாராயினும் `பயன் வேண்டுவார் அறிந்து கடைப்பிடிக்க`` என்பதே கருத்து.இதனால், `மக்கள் உணவைத்தேடி உண்டு உடம்பை வளர்ப் பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை; அவ்வளர்ச்சிக்கு ஏற்ப மெய் யறிவையும் வளர்த்து, அதற்கேற்ற செயல்களையும் உடையராதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage