
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.
English Meaning:
Experiences in the Mystic Sphere of SahasraraOn the mountain it rained,
The young deer leapt;
The rich ripe fruit from bunch above dropped;
Like the metal on the smith`s furnace,
It melted;
And over the heart, He made it flow.
Tamil Meaning:
(மலைமேல் மழை பெய்தால், அங்கு வாழும் மான்கன்று வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியெய்தித் துள்ளத்தானே செய்யு?) யோகிகள் சுழுமுனா நாடியை `மேரு` என்பர் ஆகலான். இங்கு ``மலை`` என்றது அதனையே. மான் கன்று, அதில் உள்ள ஆதாரங்களைச் சார்ந்து நினைக்கும் அந்தக் கரணங்களை. துள்ளுதல், மகிழ்ச்சியெய்தல். கொல்லன் - கருமான்; இரும்புத் தொழில் செய்பவன். இங்கு ``கொல்லன்`` என்றது யோகியை. உலை, கொல்லன் உலை. என்றது மூலாதாரத்தை. அதில் அக்கினியிருத்தலால் ``உலை`` எனப்பட்டது. மூலாக்கினியை ஓங்கி எரியச் செய்தலின் யோகி ``கொல்லன்`` எனப் பட்டான். கொல்லனது உலைமேல் உறுப்பாவது இரும்பு. ``என`` என்றது உவம உருபு. ``அமிர்தம் பொழிய வைத்தான்`` என்றது. `அமிர்தத்தைப் பொழியும்படி செய்து விட்டான்`, அஃதாவது, உலைமேல் உறுப்பை வெதுப்புவதுபோல வெதுப்பிவிட்டான்` என்றதாம் ``முலைமேல் அமிர்தம்`` என்னும் குறிப்பால்` ``ஒருத்தியை`` என்னும் சொல்லெச்சம் வந்து இயைந்தது. ஒருத்தி, குண்டலினி சத்தி. `மூலாக்கினி வெதுப் பிய தால், குண்டலினி சத்தி விழித்தெழுந்து, தனது அமிர்தத்தைப் பொழிவா ளாயினாள்` என்றபடி. `தனது முலைமேல் அமிர்தத்தை` என்க. ``மேல்`` என்றது, `ததும்பி வழிகின்ற` என்னும் குறிப்பினது. ``குலைமேல் இருந்த கொழுங்கனி`` அருட் சத்தி. வீழ்தல், நிபாதமாதல். அந்தக் கனி சுவை மிகுதற்குக் குண்டலி சத்தியின் அமுதமும் வேண்டப்பட்டது.Special Remark:
இதனால், சிவயோகத்தால் தியான சமாதிகள் கைகூட, சத்தி நிபாதம் வந்து, அது முதிர்ச்சியடைதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage