
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
பதிகங்கள்

இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.
English Meaning:
Control BreathTwo the bulls in this hamlet,
One the servant for the bulls two;
Control the bulls two, firm,
As one they will then be.
Tamil Meaning:
(மேல், ``ஆமாக்கள் ஐந்து`` என்னும் மந்திரத்தில்,* `பிராண வாயுத் தன்னை அடக்குவார்க்குக் குதிரையாயும், அல்லாதார்க்குக் கடாவாயும் நிற்கும்` எனக் கூறியதனை இங்கு வேறோராற்றான் வலியுறுத்துகின்றார்.இரண்டு கடாக்கள், இடநாடி வலநாடிகள் வழியாக இயங்குல் பிராணன். அஃது ஒன்றேயாயினும் இயக்க வகையால் இரண்டாகின்றது. இவ்வூர், இந்தத் தூல தேகம். தொழும்பன் - அடியான். ஆண்டான் சொற்படி அக்கடாக்களை மேய்ப்பவன். அஃது அகங்கார தத்துவம். ஆன்மாவாகிய ஆண்டான் அந்தக் கடாக்களை அந்த அடிமையினிடம் விடாமல் தானே தன்னிடத்தில் கெட்டியாகப் பிடித்து வைப்பானேயானால், அந்த இரண்டு கடாக்களும் ஒரு கடாவாய் விடும். அஃதாவது, `இடை நாடி பிங்கலை நாடி வழியாக இயங்காமல், சுழுமுனை நாடியில் நின்றுவிடும்` என்பதாம்.
Special Remark:
இடை நாடியால் பெரியோர் ஆதலின், ஒன்றே தொழும்பன்` என்பது பாடமன்று.`ஊர் பெரிது; அதற்கு உழைக்க இரண்டு கடாக்களே இருத்தல் அதிசயம். பின்னும் அவை இரண்டும் ஒன்றாகி விடுதல் அதிசயத்தினும் அதிசயம்` என்றவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage