ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்

பதிகங்கள்

Photo

எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.

English Meaning:
Akarshana Chakra

Smear palm leaf with silver power on a Thursday
Inscribe letter ``U``,
Place it on the plank of white Jamun tree
Face Westward,
And Chant Pranava mantra (``Aum``) eight thousand times;
This the way to attain
Power of bringing things and people unto you—Akarshana.
Tamil Meaning:
இஃது, `ஆகருடணம்` என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளாயினும், உயிரல் பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் `ஆகருடணம்` என்னும் வித்தையாம்.
இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகராம் முதலாக அமைவது யகாரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக் கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம் மந்திரங்களை அசபாமந்திரத்தோடே எண் ஆயிர உரு விரும்பிச் செபித்தால், `ஆகருடணம்` என்னும் வித்தை கைவரும்.
Special Remark:
`உகாரம் இட்டு` என்பதும் பாடமாதலால், மேல் வசியத்திற்குச் சொல்லிய அம் மந்திரத்தை உகாரம் முதலாக மாற்றிக் கொள்ளுதலும் இதற்குப் பொருந்துவதே. `ஆகருடணை` என்பது, `ஆக்கருடணை` என மருவி நின்றது. இங்குக்கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள் மந்திரங்கள் குறுக்கு வரிசையிலும், நெடுக்கு வரிசையிலும் ஒரே வகையாக அமைந்திருத்தலும், `நமசிவாயநமசி`, சிவாயநம சி` என மூலை நோக்கில் அமைந்திருத்தலும் காண்க.
மேற்கூறியவாறு இச்சக்கரத்தில் ஈசான மூலை தொடங்கி முறையே `அம், உம்` என்பவற்றை `உம், அம்` என மாறி மாறி எழுதுதலும் பொருந்தும் என்க. இரண்டாம் அடியில், ``எண்ணா`` என்பதற்கு, `நாள்களை எண்ணி` என உரைக்க. எண்ணா எழுத்து - செபியாத மந்திரம்; அசபை. ``வேண்டி நோக்கு`` என்றாராயினும், `நோக்கி வேண்டு` என்றலே கருத்தாதல் அறிக. இதனுள், மூன்று, நான்காம் அடிகளைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிந்து கொள்க.