
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.
English Meaning:
Sum Sauh Sivaya NamaConjoin the sixth letter U
To the forty-eighth letter S (a)
Add Bindu letter M
To form the syllable Sum:
In similar fashion
Conjoin the fourteenth letter Au to S (a)
Add Nada letter Ah (:)
To form the syllable Sauh;
Chant them Si Va Ya Na Ma to follow;
Thus when you chant the mantra, full formed
As Sum Sauh Si Va Ya Na Ma,
The triple Pasas in distress howling
Take to their heels, away, away.
Tamil Meaning:
மேற்கூறிய சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்துடன் (`ஸ்` என்பதுடன்) ஆறாம் எழுத்தையும், (`உ` என்பதையும்) பதினான்காம் எழுத்தையும் (`ஔ` என்பதையும்) ஏறச்செய்து, (`ஸு` என்றும், `ஸௌ` என்றும் ஆக்கி,) அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் மூன்று மலங்களும் அலறி ஓடிவிடும்.Special Remark:
`ஏற இட்டு, சீற இட்டு` என்பவற்றில் அகரங்கள் தொகுத்தலாயின. ``கூறிட்டு`` என்பது கூறிட என்பதன் மரூஉ. கூப்பிட்டு என்றது. இலக்கணை. இதனுட் கூறப்பட்டது, `திருவைந் தெழுத்தை, `ஓம் ஸும் ஸௌ: சிவாயநம` எனச் செபித்தல் மிகச் சிறந்ததாகும்` என்பதும் `அதன் பயன் வீடுபேறே` என்பதுமாம்.இதனால், மேலெல்லாம் பலவகைப்படக் கூறிவந்த திருவைந் தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage