
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.
English Meaning:
Ha(m)sa is Hara`s Mantra``Ha`` and ``Sa`` together form Hara`s mantra (Hamsa)
But none know the truth of Hamsa;
When that truth any one knows
He shall know Hamsa as beginningless.
Tamil Meaning:
சிவனை, `ஔ` என்றும், `சௌ` என்றும் பிறந்து பொருந்திய மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் அமைந்த மறை பொருளை ஒருவரும் அறியவில்லை. அறிந்தார்களாயின் `அம்சம்` எனப்படுகின்ற அந்த மந்திரந்தானே அனாதியான சிவமாய் நிற்கும்.Special Remark:
`அரனை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. ``அவ், சவ்`` நான்கில் முதலது, `ஔ, சௌ` என்பவற்றின் போலி. ஏனை யவை, ஈற்றில் மகாரத்தோடு கூடிய மந்திரங்கள். ``சவ்வும், அனாதியும்`` என்ற உம்மைகள் முறையே இழிவு சிறப்பும், உயர்வு சிறப்புமாம்.இதனால், `அம்சமந்திரம் சிவ மந்திரமாம் சிறப்பினை யுடையது` என்பது உணர்த்து முகத்தால், மேல், ``அகார உகார``, (934) ``அவ்வென்ற போதில்`` (936) என்னும் மந்திரங்களிற் கூறிய உகாரத்திற்கு ஈடாக `சம்` என்பதனை வைத்து அம்ச மந்திரத்தால் பிராணாயாமத்தைச் செய்தலும் பொருந்தும் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage