
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.
English Meaning:
Letter Ma Central in Chakra With 25 ChambersThat Chakra is with six by six lines formed,
The lines inside are five by five
Thus in all into five and twenty chambers divided;
In Centre of these is Letter Ma.
Tamil Meaning:
இறைவன் அமர்ந்திருக்கின்ற மேற்சொல்லிய சக்கரத்தில் இருபத்தைந்து அறைகள் அமைந்துள்ள ஒரு பகுதியைத் தனியாக வாங்கித் தனிச்சக்கரமாகக் கொண்டு, அதன் நடுவிடத்தில் மகாரத்தைப் பொறிக்க.Special Remark:
எஞ்சிய அமைப்பு முறைகளை அடுத்த மந்திரத்தில் கூறி முடிப்பார். நூற்றிருபத்தொன்றாகக் காணப்படும் மேற் சொல்லிய சக்கர அறைகள் ஒன்று இருபத்தைந்து அறைகளாக அமைந்த நான்கு சக்கரங்களின் கூட்டாக அமைந்திருத்தலின் `அவற்றுள் ஒன்றை மட்டும் கொள்க` என்பார், அதுதானே பிறிதொரு சக்கரமாதலை உணர்த்தற்பொருட்டுச் செய்முறையை விரித்துக் கூறினார் என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage