
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.
English Meaning:
Chant Letter of Dance – SiHow do you see the Dancer?
Many are the ways;
Chant first Letter of Dance (Si),
Thou with Dancer will one in thought be;
That is the way to see the Dancer truly.
Tamil Meaning:
கூத்தப்பெருமானைப் பருவடிவிற்காண நிற்கும் பொருள்கள் பலவாம். அவற்றுள் மந்திரம் சிறந்தது ஆதலின், அவற்றுள் தலையானதாகிய மந்திரத்தை முதலெழுத்தளவில் ஓதி னாலும் அப்பெருமானோடு ஒற்றித்து நிற்கும் உணர்வை மக்கள் பெறு வார்கள். ஆகவே, இதுகாறும் சக்கர வடிவில் மந்திரங்களைக் கூறி வந்ததன் குறிக்கோள் அப்பெருமானை அடைவிப்பதேயாம்.Special Remark:
``பேசிடில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.இதனால், மேல் பலபடக் கூறியதன் பயன் இது என்பது கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage