
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.
English Meaning:
SivayanamaInscribe Letters Five Si Va Ya Na Ma;
In the next row place Letters Ya Na Va Si Ma;
Further on place the letters in order thus;
Ma Va Ya Na Si; Si Ya Na Ma Va;
And Va Si Ma Ya Na
Thus do the Five Letters in Chakra permuted stand.
Tamil Meaning:
மேலை மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு பொறிக்கப் பட்டபின் செங்குத்தாய் நின்ற வரிசைகளில் முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேல்நின்று நோக்கினால், `ம ய ந வா சி` என வரும். அவை முறையே, `நிலம், நீர், தீ, வளி, வான்` என்னும் பூதங்களாய் நிற்கும். ஆதலால், அவற்றை முதலாகக் கொண்டு வலம் நோக்கிச் செல்லும் தொடராகிய மந்திரங்களும் அப்பூதங்கள் ஆதலை யுடையவாம். அதனால், அவ்வெழுத்துக்களும், தொடர் களும் அப்பூதங்கட்கு உரிய `பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைமை` என்னும் நிறங்களாயும் நிற்பனவாம். அவை இவ்வாறு நிற்றலால், அவை அடங்கி நின்ற சக்கரத்தைக் கூத்தப்பெருமான் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்றான்.Special Remark:
முதலிரண்டடிகளில், `ஆம்` என்பன எஞ்சி நின்றன. மூன்றாம் அடியில், ``நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்`` என்பது, முன்னும் பின்னும் உள்ள அடிகளுடன் சென்று இயையும், நேர்தர நிற்றல் - செம்மையுண்டாக நிற்றல். நின்ற எழுத்துக்கள்நேர்தர நின்றிடில்`` என்றதனால், முதல் எழுத்துக்கள் மட்டிலே முதன்மை யாகக் கொண்டு, பின்னர் அவற்றைத் தொடர்ந்த வல எழுத்துக்கள் அவற்றின் வழியவாக்கப்படும். உம்மை, `பிறவிடத்து நிற்றலேயன்றி` என எச்சம். பொது நெறிபற்றிப் பூதங்களையே கூறினாராயினும், சிவநெறியின் வழி அவை பஞ்ச கலைகளாயும் நிற்கும் என்க.இதனால், திருவைந்தெழுத்தை மேலைமந்திரத்திற் கூறிய வாறு பொறித்தால் உண்டாகும் சிறப்புக் கூறப்பட்டது
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage