
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.
English Meaning:
Uchchatana ChakraOn a plank of portia tree wood
At the north-west corner
Where Aiyanar his temple has,
And on a dark leaden-plate smear poison,
Inscribe mark of Bindu (dot)
And surround it by ``Om``
Then concentrate on the Mantra,
Uchchatana (the Science of Exorcism) will be yours.
Tamil Meaning:
இஃது உச்சாடனம் என்னும் வித்தை கூறுகின்றது. உச்சாடனம் - ஓட்டுதல். மேல்மயங்கிப் பண்ணின உயிர்களையே விலகி ஓடப் பண்ணுதல் உச்சாடனம் என்க.இதற்குப் பலகை புரசம் (பூவரசம்) பலகை. சக்கரத்திலும், ஏட்டிலும் எழுத வேண்டிய மந்திரம் மேற்கூறிய வாறேயாம். ஓலையில் கரியும், நஞ்சும் பூசி, ஓங்காரத்தில் மகாரத்தை நீக்கி ஓகாரம் மட்டும் பலகையிலும், ஓலையிலும் சக்கரத்தைச் சுற்றி வளைத்து எழுதி, அதை ஒருமுறை பலகையோடு வழிபட்டு ஓலையைக் கொண்டுபோய் ஐயனார் கோவிலில் வடமேற்கு மூலையில் பாதுகாப்பாகப் புதைத்து விட்டுச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தை மேற்கூறியவாறே செபித்து வர, `உச்சாடனம்` என்னும் வித்தை கைவரும்.
Special Remark:
``ஐயனார் கோட்டத்தில்`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. பாங்கு பட - பாதுகாப்பு உண்டாகும்படி. `காரேடு` என வரற்பாலது, `கருவேடு` என வந்தது. இதில் இன எதுகை வந்தது. இதற்குரிய சக்கரம் மேற் காட்டியதே ஆயினும், சக்கரத்தை ஓகாரத்தால் வளைத்தல் வேண்டும்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage