
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.
English Meaning:
Five Letters is AllWith Five letters He created elements five;
With Five letters He created diverse life;
With Five letters He supported spaces vast,
With Five letters He in Jivas abides.
Tamil Meaning:
சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.Special Remark:
``ஐந்து பூதம்`` என்றது உபலக்கணம். ஐந்தொழில்களில் இங்கு வேண்டற்பாலனவாகிய இரண்டையே கூறினார். ஐந் தொழிலையும் சிவபெருமான் ஏவுதல் வகையானும், இயற்றுதல் வகையானும் செய்தருளுவன்.``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாயின் விளங்கிய ஞானம் இன்றாம்``1
என்றவாறு, நாதம் இன்றி ஒருவர்க்கும் சிறப்புணர்வு கூடாது ஆதலால், `ஏவுதல் ஐந்தெழுத்தாலே` என்பது தெளிவாகும். இனி, அத் தொழில்களைத் தானே இயற்றுமிடத்தும் அவற்றால் உயிர்கள் பயன் கொள்ளுதற்கு நாதம் இன்றியமையாமை பற்றி அதனையும் ஐந்தெழுத் தாலே ஆவனமாகக் கூறுதல் அமைவுடைத்தாம். ஐந்தெழுத்தாலே திருமேனி கொள்ளுதல் எவ்விடத்தும் ஒத்ததாதல் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage