
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
English Meaning:
Aum Denotes Tattva Manifestations of SivaThey know not well Letter Eight (``A``) and Two (``U``)
They the ignorant one, know not what ``Eight`` (``A``) and Two (``U``) are;
Eight and Two (AUM) are but Ten
That verily is truth of Siddhanta Jnana.
Tamil Meaning:
மேல், ``எட்டும் இரண்டும்`` என்னும் குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட அப்பொருள்களை அனுபவமாக உணராதவர், `அ, உ` என்று எழுத்தை அறியத் தொடங்கும் அத் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். இன்னும், எட்டு என்னும் எண்ணை யும் இரண்டு என்னும் எண்ணையும் கூட்டுத்தொகை காணும் அறிவும் இல்லாதவரே யாவர். இனி, ``எட்டும், இரண்டும்`` என்பதற்கு, மேற் சொல்லப்பட்ட இருபொருள்களில் பின்னதாகிய `பத்து` எனக் கொண்டு யகாரத்தைக் கொள்ளுதலே சிவாகமங்களின் ஞானபாதக் கருத்தாகும்.Special Remark:
கல்வியறிவு மிக்கிருந்தும் அதனாற் பயன் கொள் ளாமைபற்றி அவரை இத்துணை அறிவிலிகளாகக் கூறினார். ஆகவே, இரண்டாம் அடிக்கு இந்த இருபொருளும் கொள்க.அவ் இருபொருள்களில் ஒன்றை,
``அ உ அறியா அறிவில் இடைமகனே`` 1
என்பதிலும் காணலாம். மேற் காட்டிய திருவாசகத்தொடர் மேற்போக் கில் இங்குக் கூறியவாறே இவ் இருபொருளையும் குறித்தல் வெளிப் படை. இரு மூன்று நான்கு - பத்து. சிவாகமங்களே சித்தாந்தமாதல் நன்கறியப்பட்டது.
இவ் இரண்டு மந்திரங்களாலும் முன்னர்க் கூறிப் போந்த மந்திர எழுத்துக்களுள் சிலவற்றின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது. `தமிழில் மந்திரம் உண்டோ` என ஐயுறுவார்க்கு `உண்டு` என இம்மரபு தெளிவுறுத்துதல் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage