
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.
English Meaning:
Chant ``Om Sivaya Nama``In formless space rises Nada,
In Sakti of slender waist rises Bindu,
Together they form, OM
With letter ``Ya`` in centre,
When mantra Si Va Ya Na Ma is incessant chanted,
That mantra (Om Sivaya Nama) spouts Siva Bliss.
Tamil Meaning:
சிவம் சூக்குமமான நிலையில் பரவெளியாய் நிற்க, அதன்கண் நாதம் தோன்றும். பின்பு சத்தி அச்சிவத்தைவிட தூலமாய் அவ்வெளியினுள் தோன்ற, அதனிடத்து விந்து தோன்றும். ஆகவே, அப்பெற்றியவாய நாத விந்துக்களின் நடுவில் சிகார யகாரங்கள் பொருந்தி நிற்க நின்ற ஆறு எழுத்துக்களும் உயர்ந்த மந்திரமாய் விளங்கும்.Special Remark:
`அதனால், அம்மந்திரத்தை மேற்கொண்டு செபிக்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவாறு ஆறு எழுத்தாய் நிற்கும் மந்திரம், `ஓம் நமச்சிவாயம்` என்பது. முன்னர் நின்ற விந்துவை அடுத்து நிற்பது யகாரமாதலின் அதனை முன்னர்க் கூறினார். நாதம் சகாரமோடு புணருமிடத்து சகார மெய்யாய் நிற்கும்.`ஓoநம‹‹ிவாய` என்னும் மந்திரம், தமிழில் `ஓநமச் சிவாய` என்றும், `ஓநமச்சிவாயம்` என்றும் நிற்கும் என்பதை,
``போற்றியோ நமச்சிவாய`` 1
என்னும் திருவாசகத்தாலும்,
``நமச்சிவா யம்சொல்ல வல்லோம்`` 2
என்னும் திருத்தாண்டகத்தாலும் அறிக. இங்ஙனமாகவே, `தமிழ் கூறுவார்க்கு இஃது ஆம்` என்றதாயிற்று. ஆக்கங்கள் வருவித்துக் கொள்க. பெருகுதல் - தூலமாதல், உருவிட - ஊடே நிற்க. `ஆறும் மந்திரமாய் உறும்` என்க.
இதனால், மூலமந்திரம் தமிழில் நிற்பதொரு முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage