
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.
English Meaning:
Five Letters are the RefugeRealize truth of blissful letters Five,
The transcendent Reality fills your heart;
Truth this is;
And immortal you will be;
Letters Five is your Refuge;
None other, I emphatic say.
Tamil Meaning:
ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ் செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன்; இதில் சிறிதும் பொய்யில்லை.Special Remark:
ஐந்து மலங்களாவன; `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்பன.``மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்`` 1
என்றதேயன்றி
``மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்தெனவே`` 2
எனவும் அருளிச் செய்தமை காண்க. உகுதல் - சிந்திப்போதல். ``உண்மை`` என்றது பொருளை. அஞ்செழுத்தின் பொருள்கள் மேலே பலவிடத்தும் கூறப்பட்டன. `உண்மை விளக்கம், திருவருட்பயன்` என்னும் நூல்களிலும் தெளியக் காண்க. `பொருளை அறிதல்` மேற்கூறிய மூன்றெழுத்துக்களின் சிறப்பு உணர்தலைப் பயக்குமாதலின், ``அறிந்த பின், நெஞ்சகத்து உள்ளே நிறையும் பராபரம்`` என்றார், மனை, பெத்தத்தில் உடம்பும், முத்தியில் அருளுமாம். `மனைக்கு அழிவில்லை` எனவே, `அருளே நிலைக்களமாய்விடும்` என்றதாயிற்று. ஆகவே, மேற் கூறிய மூன்றெழுத்தின் பெருமை இதனால் வலியுறுத்தப்பட்டதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage