
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.
English Meaning:
Siva and Sakti Interchange Their Bija Mantra StatesThe Lord is seated in His Consort`s Letter (Sauh)
The Mother is seated in Her Lord`s Letter (Hum)
When thus the Two are in amity seated
The holy beings comprehend the meaning inner.
Tamil Meaning:
மேற்கூறிய சக்கரத்தில் சந்திகளில் உள்ள குற்றெழுத்துக்களில் முதலாவதாகிய அகாரத்தை வாங்கி அடியிலும், இகாரத்தைவாங்கி முடியிலும் வைத்து இடையில் `ஹர` என்னும் மந்திரத்தை வாங்கியிட்டு நோக்கினால் இலிங்கமாய்த் தோன்றும். ஆதலின் அவற்றை அம்முறைப்படி மூலாதாரம், இருதயம், புருவநடு என்பவற்றில் வைத்துத் தியானித்து மகாரத்துடன் கூட்டிப் பிராணா யாமத்துடன் செபித்தால், கூத்தப்பிரானது ஒளிவடிவு காட்சிப்படும்.Special Remark:
இங்குக் கூறிய முறையில் இலிங்க வடிவம் அமையுமாறு:-இவற்றை மகாரத்துடன் கூட்டி செபிக்குமாறு, `அம் இம் ஹரோம்` என செபித்தலாம். `அம், இம்` என்பன அம்ச மந்திரம் போல வாயுப்பயிற்சியைத்தரும். ``தொம்`` என்பது நடனக் குறிப்பு.
இதனால், மேலைச் சக்கரத்துள் நின்ற சில எழுத்துக்கள் மந்திரம் என்பவற்றது சிறப்புணர்த்தும் முகத்தால் அவை தம்முட் கூடிநின்று பயன் விளைக்குமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage