
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.
English Meaning:
Knowledge of Siva is VastBy way of Tapas great
They reached Paraparam,
To Him they, their self surrendered;
And they adored Him saying, ``Si Va Ya Na Ma``;
But I speak no more than a tiny bit,
Of Lord`s Greatness, mighty;
I near Him but a little;
Beyond this, I nothing know.
Tamil Meaning:
இயன்ற அளவு செய்யப்பட்ட சிவன் பணியே, மேலானவற்றிற்கெல்லாம் மேலான வீட்டினைப் பெறுவிப்பதாகும். அதனால், தற்போதத்தை விட்டவர்கள் சிவனையே புகலிடமாக அடைவர். ஆகலின், யானும் அவனது பணி வகைகள் பலவற்றில் ஏதேனும் ஒன்றில் எள்ளளவாயினும் மேற்கொள்வேன்; போற்றுங் கால் அவனது திருநாமத்தையன்றி வேறொன்றைச் சொல்ல அறியேன்.Special Remark:
`இறப்பில்தவம்` 1 என்பார். ``மாதவம்`` என்றார். `பராபரம் ஆற்றும்` என மாறிக் கூட்டுக. ஆற்றுதல் - தருதல். `பராற்பரம்` என்பது `பராபரம்` என மருவிற்று.இதனால், `சிவசக்கரத்தை அமைத்து அதன் வழி இயன்றளவு சிவழிபாடு செய்யுங்கள்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage