
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.
English Meaning:
Chant ``Ma`` of Grace – SaktiShe Herself Grace grants
If upward you lift Kundalini;
She Herself granting Grace
High above in Sahasrara places thee;
There do you chant Her syllable ``Ma``
You shall indeed be placed
Like a gem of ray serene.
Tamil Meaning:
தானாகவே முன் வந்து காக்கின்ற அருட் சத்தியின் எழுத்தாகிய வகாரத்தை ஓதினால், அவள் தானே முன்வந்து சிவ ஞானத்தை அளித்துப் பரமுத்தியை அடையச் செய்வாள். இனி, அவளாலே உபதேசிக்கப்பட்ட மல எழுத்தாகிய மகாரத்தை ஓதினால், அவ்வருட் சக்தியால் வழங்கப்பட்ட மாணிக்கமாகிய உயிர் மாசுநீங்கி ஒளியுடையதாய் விளங்கும்.Special Remark:
`குரு சிவமேயாதலின், தானே உபதேசித்த` என்றார். கல், உவம ஆகுபெயர். ஒளியுடையதனை ``ஒளி`` என்றார்.இதனால், வகார மகாரங்களை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage