
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.
English Meaning:
Mukti is When Aum Appears in Garland of Letters WithinCourse breath through central Sushumna,
And be in the centre within of the Garland of Letters;
When in the Centre of that garland
The Primal Mantra AUM, Vedas speak of appears,
Then is Mukti, sure indeed.
Tamil Meaning:
பிராண வாயுவை உடம்பில் நடு நாடியாகிய சுழுமுனையில் பொருந்தும்படி செலுத்தினால், அந்நாடியில் நிற்கின்ற ஆதார மலர்களில் ஐம்பத்தோர் எழுத்துக்களும் முறையானே விளங்கி நிற்கும். அவ்வாறு நிறைவிடத்து முதற்காலத்திலே யாவர்க்கும் பொதுவாக வேதத்தை அருளிச்செய்த முதற்பொருளாகிய சிவன் தன் அடியார் நடுவில் இருக்கும் வீடுபேற்றைத் தருதல் திண்ணம்.Special Remark:
முதலடியில், `நடுவுறச் செய்ய` என ஒருசொல்லும், இரண்டாம் அடியில் `மாலையாக` என ஆக்கமும் வருவிக்க. `காலைக் காயத்தில் நடுவுறச் செய்ய` என்க. கால் - காற்று. `காலை உடம்பின் நடுவிடத்தில் கொணர்ந்து ஊன்ற` என்பது நயம். ஆதல் - தோன்றுதல். `தோன்றவே, அவற்றைச் சுட்டியறிந்து நீங்குதல் கூடும்` என்பது கருத்து. அடியார் நடுவுறும் முத்தி, அபரமுத்தியாம். துணிபுபற்றி, எதிர் காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.இதனால், மேற்கூறிய செபத்திற்குப் பிராணாயாமம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage