
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அகார உகார சிகாரம் நடுவா
வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.
English Meaning:
Three Ways of Chanting PanchaksharaWith ``A`` and ``U``` to commence,
And ``Si`` in centre
(That is, as Om Na Ma Si Va Ya),
With ``A`` and ``U`` to commence,
And ``Va`` and rest aspirating in breath regulated,
(That is, as Om Va Si Ya Na Ma)
With ``A`` and ``U`` to commence,
And ``Si`` and rest in order following,
(That is, as Om Si Va Ya Na Ma)
As you thus chant,
The Primal Lord of ``Om`` appears,
Rejoicing.
Tamil Meaning:
சிகாரம் அகார உகாரங்களின் நடுவே நிற்கக் கொண்டு செய்கின்ற பிராணாயாமத்தில் கும்பிக்கப்பட்ட பிராணவாயு வோடே ஆறு ஆதாரங்களில் பொருந்தி, `சிவ என்னும் மந்திரத்தை ஓதிச் சிவனைத் தியானித்தால், பிரணவ முதல்வனாகிய அப்பெரு மான் மகிழ்ந்து சக்கரங்களில் நின்று அருள் செய்வான்.Special Remark:
`சிகாரம் அகார உகார நடுவாக` என்க, இது, `சிம்` என்பது நடுவேவர, முன்னே `அம்` என்பதையும், பின்னே ``உம்`` என்பதனையும் ஓதல் வேண்டும் என்றதாம். அஃதாவது, பிராணனை ``அம்`` என்று பூரித்து, `உம்` என்று இரேசித்து, `சிம்` என்றுகும்பித்தல் வேண்டும் என்றவாறு. இதுவும் ஒருவகைப் பிராணாயாம முறை. ``வகாரமோடு சிகாரமுடனே`` என எண்ணிடைச்சொல் எண்ணப் படும் பெயர் தோறும் வந்தது. அதனால், அப்பெயர்களை ஒருங்கு இணைய வைத்து உரைக்க. `ஓகாரம்` என்பது குறுக்கலாயிற்று.இதனால், மேற்கூறிய சக்கரங்களின் வழிபாட்டிற்குரிய, சிறந்ததொரு செபம், அதற்குரிய பிராணாயாமத்துடன் சொல்லப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage