
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.
English Meaning:
Marana ChakraSmear a green palm leaf with ingredients five stated
In a triangle Chakra in the cremation ground
Bury it at noon in southeast corner,
Where God Agni stands,
That the Mantric device for Marana,
(Death) spell for enemies to destroy.
Tamil Meaning:
இது `மாரணம்` என்னும் வித்தை கூறுகின்றது. மாரணம் - மரணத்துன்பம். `அழிக்கப்படற்பாலன` என்று எண்ணும் உயிர்களை அழித்தொழிப்பதே மாரணம் என்க.உச்சாடனத்திற்குமேல் மாரணம் செய்ய விரும் பினால், மேலே சொல்லியவாறு செய்தபின் மற்றோர் ஓலை அதுபோல எழுதி, ஐங்காயம் பூசி உச்சி வேளையில் (நண்பகற்போதில்) சுடு காட்டிற் கொண்டுபோய் அக்கினிமூலையில் ஒன்றின்மேல் ஒன்றாய் எட்டு மூலை உண்டாக இரண்டு சதுரங்களையும் அவற்றின் உள்ளே ஒரு சதுரத் தையும் வரைந்து உள்ளே புதைத்துவிட்டு வந்து வழிபாட்டினையும், செபத்தையும் முன்போலச் செய்துவர, `மாரணம்` என்னும் வித்தை கைவரும்.
Special Remark:
ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. ``பச்சோலை`` என்றது, `எழுதுவதற்குப் பதமாயுள்ள ஓலை` என்றவாறு.முச்சதுரம் வரையும் முறை:-
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage