
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.
English Meaning:
Contemplate Si Va YaThe Five Kalas arose
From letters ``A`` and rest (A,U,M)
From them arise the Five Letters,
Leave out Letters ``Na`` and ``Ma``
(Thus ``Si Va Ya`` contemplate)
Nandi in Muladhara you seek;
Those who meet Him there with Parai (Sakti)
Will have actions none more to perform.
Tamil Meaning:
நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் உள்ள அகரம் முதலிய எழுத்துக்களில் சிலவாயுள்ள நகாரம் முதலிய ஐந்தெழுத் துக்களை அம்முறையில் நில்லாது பிரணவம் முதலாக மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே நிற்க மாற்றி வைத்து, தடத்த சிவனை மூலாதாரம் முதலாகவே திரோதன சத்தியோடுகூடத் தியானித்து, இவ்வாறு சந்தியா காலங்களில் வழிபடுபவர்க்கு வேறு சந்தியாவந்தனம் முதலிய சடங்குகள் வேண்டுவதில்லை.Special Remark:
``ஐந்து கலையில் அகராதி`` என்பதில், ஏழனுருபு பெயரோடு முடிந்தது. ``தன்னில்`` என்பது பன்மையொருமை மயக்கம். ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதிமாற்றி`` என்றது, `பிற எழுத்துக்களுள் சிலவாய அவையாக நிலையாமல், வேறாக மதிக்க` என்பது உணர்த்தற்கு. மேல் (959) ``மகார முதல்வன்`` என்றவாறே இங்கு ``மகாராதி`` என்றார். இங்குக் கூறுகின்றதும் தூல பஞ்சாக்கரமாதல் பற்றி. தூல பஞ்சாக்கரத்தை இறைவன் திருவடி முதலாகக் கொண்டு நிற்கும் முறையிலே ஆதாரங்களில் அமைத்தல் வேண்டும் என்பது கருத்து. `` மூலத்தே `` என்றது, ``மூலத்தில் தொடங்கியே`` என்றவாறு. மூலாதாரம் முதலிய எல்லா ஆதாரங் களிலும் `சிவனையே அவனது சத்தியோடு தியானிக்க` என்றது, `ஆதார மூர்த்திகளைச் சம்பு பட்சத் தினராகத் தியானிக்க` என்றதாம். சிறப்புப் பற்றிச் சந்தியாகாலத்தையே வரைந்தோதினார். அதனால், பிற காலங்கள் தவிர்க்கப்பட்டன அல்ல வாம். ``சடங்கு`` என்றது, `பிறிது சடங்கு` என்னும் குறிப்பினது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்றது.பேரம்பலச் சக்கரத்தில் நிற்கும் ஐம்பத்தோரெழுத்துக்களை அகாரம் முதலாகத் தொடங்கி எண்ணுதல் அவற்றின் தோற்ற முறையாகும். அம்முறையில் முதல் தொடங்கிப் பதினாறு (உயிர்) எழுத்துக்கள் சாந்தியதீத கலையில் நிற்கும் (மெய்யெழுத்துக்களில்) ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய மூன்றெழுத்துக்கள் சாந்தி கலையில் நிற்கும். அடுத்த ஏழெழுத்துக்கள் வித்தியா கலையில் நிற்கும். அடுத்த இருபத்து நான்கு எழுத்துக்கள் பிரதிட்டா கலையில் நிற்கும். இறுதி எழுத்தாகிய க்ஷகாரம் ஒன்றும் நிவிர்த்தி கலையில் நிற்கும் என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage