
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.
English Meaning:
Chant Namasivaya and Vanquish Karmas; ChantSivaya Nama and Be One With Sadasiva
In the Five Letters beginning with ``Na`` (Na Ma Si Va Ya)
Are all actions you seek to do;
In the Five Letters are stubborn Karmas vanquished;
Those who hold in their hearts
The Five Letters with ``Si`` to begin (Si Va Ya Na Ma)
Will with Primal Sadasiva one be.
Tamil Meaning:
பிரணவமும், சிவமந்திரமும் என்னும் இரண்டுமே உயிர் சிவமாதற்குரிய சாதனமாகும். அவற்றோடே நில்லாமல் பிறவற்றோடு பொருந்தி நிற்பனவெல்லாம் கருவிக் கூட்டத்துள்ளே நிறுத்துவனவே. சிவத்தோடு ஒன்றிய நிலையில் எல்லாவற்றையும் காண்கின்ற அனுபூதிச் செல்வர்களும் தமக்குத் தாம் சிவமேயாய் நிற்கும் தெளிவு உண்டானது அச்சிவமந்திரத்தால் என்றே ஆர்வத்துடன் கூறுவர்.Special Remark:
`பிரணவம்` என்பதை `நவம்` என்றே கூறினார். ``சிவம்`` மூன்றில் முதலதும், இறுதியதும் அதன் மந்திரத்தின்மேல் நின்றன. சிவ மந்திரம், `சிவ` என்பது. `நவமும் சிவமும்` என்றதனால், `ஓம் சிவ` என்பதைக் குறித்ததாயிற்று. ஈற்றில் மகாரத்தைக்கூட்டி `ஓம் சிவம்` என்றலும் பொருந்துவதாதல், `சிவ` என்னாது, ``சிவம்`` என்ற தனால் பெறப்படும், `ஒன்றிலாதன` என்பது பிறவற்றோடும் கூடி நிற்றலைக் குறித்தது. அதனால்,, இங்கு நகர மகரங்களேயன்றி யகரமும் விலக்கப்பட்டது. ``தானாம்`` என்பது, `தாம் தானாம்` எனப் பொருள் தந்தது ஆற்றலால். தான், சிவம். ஈற்றடி முதலில், `சிவத்தால் என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மேற் கூறிவந்த மூன்றெழுத்து மந்திரத்தினும் இவ் இரண்டெழுத்து மந்திரம் சிறப்புடைத்தாதல் இதனுள் கூறப்பட்டதாம். ``ஐம்பதெழுத்தே`` (948) என்பது முதலாக இதுகாறும் திருவைந்தெழுத்தின் பெருமையே விரித்துக் கூறினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage