
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.
English Meaning:
Significance of ChakraWithin this Chakra is much good that comes
Within this Chakra are Names Five
This Chakra is Letter-Five of Dancer Divine
This Chakra is where Dance Divine incessant goes on.
Tamil Meaning:
கூத்தப்பெருமானது பஞ்சாக்கர பேதங்கள் அனைத்தும் இச்சக்கரத்தை இடமாகக் கொண்டன. அதனால், இதன்கண் அமைந்த நலங்கள் இன்னும்பல. அவை அத்திருவைந் தெழுத்தால் குறிக்கப்படும், `சிவன், அருள், ஆன்மா, திரோதாயி, ஆணவம்` என்பனவும், அவற்றுள் சிவன் ஆன்மாக்களின் பொருட்டுச் செய்யும் அளவிறந்த கூத்துக்களும், பிறவுமாம்.Special Remark:
மூன்றாம் அடியை, `கூத்தன் எழுத்தைந்தும் இச்சக்கரம் கொண்ட` என மாற்றி, முதற்கண் வைத்து உரைக்க. ஏனை இடங்களில் ``கொண்ட`` என்பது, செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப் பட்டதாம். குணம் - நன்மை. ``பல`` என்றதை எடுத்தல் ஓசையாற் கூறி, இப்பொருள் காண்க. குறி - குறிக்கோள்; குறிக்கப்பட்ட பொருள். நின்ற - நின்றன. ``பல, ஐந்து`` என்பவற்றின்பின் `உள்ளன` என்பது எஞ்சி நின்றது. கூத்து, `ஞான நடனம், ஊன நடனம்` என இருவகைப் பட்டு, அவை ஒவ்வொன்றும் ஐவைந்தாதலேயன்றி, `தூல நடனம், சூக்கும நடனம், பர நடனம்` என்று ஆதலும், அனைத்து நடனங்களும் சிறப்புவகையால் தத்துவந்தோறும், ஆன்மாக்கள்தோறும் வேறு வேறாதலும் ஆகிய பலவும் அடங்கப் பொதுமையில் ``கூத்து`` என்றார்.இதனால், மேற்கூறிய சக்கரத்தது சிறப்பின் மிகுதி கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage