
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.
English Meaning:
Chant His Name: He Beckons to YouThey who continuously chant the Lord`s Holy name,
In desire high,
For them Karma`s miseries fleet away;
The Lord says: ``Come unto me``
—He of Matted Locks.
Tamil Meaning:
சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தளர்ச்சியின்றி ஓத உறுதிபூண்டு நிற்பவர்கட்கு, வினைக்குழியில் வீழ்ந்து கிடந்தாலும் எழுந்து கரையேறுதல் கூடுவதாம். மேலும் அப்பெருமான் அவர்களை வினைத்துன்பம் விட்டொழியுமாறு தன்மாட்டு அழைத்து ஆண்டுகொள்வான்.Special Remark:
`வீழ்ந்தும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. போந்திடும் என்னும் - `வாருங்கள்` என்று அழைப்பான். `புரிசடையோனாகிய தலைவனும்` என மேலே கூட்டி உரைக்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage