
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.
English Meaning:
Chant Namasivaya and Vanquish Karmas; ChantSivaya Nama and Be One With Sadasiva
In the Five Letters beginning with ``Na`` (Na Ma Si Va Ya)
Are all actions you seek to do;
In the Five Letters are stubborn Karmas vanquished;
Those who hold in their hearts
The Five Letters with ``Si`` to begin (Si Va Ya Na Ma)
Will with Primal Sadasiva one be.
Tamil Meaning:
நகாரம் முதலாக நின்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் நினைத்த செயல் கைகூடும்; எவ்வாறெனில், ஆன்மாக்களுக்குப் பயனை விளைக்கின்ற வினைகள் அதன்கண் அடங்கியிருத்தலால். சிகாரம் முதலாக நின்ற மேற்கூறிய மூன்றெழுத்து மந்திரத்தில் அவையின்மையால், அதனைத் தெளிந்து ஓத வல்லவர்கட்கு உண்மை முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே தலைவனாய் நிற்பான்; என்றது, `அபரமுத்திப் பெரும் பயன் உளதாகும்` என்றவாறு.Special Remark:
முதலடியின் இறுதியில், `கூடும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதன்பின், `என்னை` என எடுத்துக் கொண்டு உரைக்க. ``அடங்கிய`` என்பது முற்று. `வல்வினை அடங்கிய` என மாற்றி. `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அடங்கியது நகாரத்திலாம். ``சிம் முதல்`` என்பது அதனை முதலாக உடைய மேற் கூறிய மந்திரத்தைக் குறித்தது. ``தானே`` என்னும் பிரிநிலை உயர்வு சிறப்பு உணர்த்தி நின்றது. மந்திரங்களை ஓதும் நிலை நாதத்தைக் கடவாத நிலையாதலின், அதற்கு அபரமுத்தியே பயனாதல் அறிக.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage