
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.
English Meaning:
Na Ma Si Va is Sakti MantraThis corporeal body is of rice food made,
Offer it into the fire of Om
Chant incessant Na Ma Si Va
That the name of Sakti Finite is;
She, Mistress of Dharma, stands revealed.
Tamil Meaning:
அரிசி முதலியவற்றில் உடலுக்கு நலந்தரும் பொருளாய் நின்று, அவை சோறு முதலியனவாய்ப் பக்குவப்பட்ட பின்பு அவற்றை, வயிற்றுத்தீ வேள்வித்தீயாகுமாறு அதில்நின்று அவிசாகச் சீரணிப்பிக்கின்ற அத்தன்மையளான திரோதான சத்திக் குரிய நகாரம் முதலாக நின்ற அந்நான்கெழுத்தே துணை என்று இருப் பவர்கட்குச் சிவசத்தி அவர்களது வழிபாட்டின் பயனைத் தரும் முதல் வியாய் நீங்காது நிற்பாள்.Special Remark:
ஆமம் - அரிசி. அன்னம் - சோறு. இவை உபலக்கணம். `ஓமம், உதம்` என்பன உருவகங்கள். உதம் - அவிசு. ``இருந்து பண்ணும்`` என்னும் அடைமொழியால், ``ஒருத்தி`` என்றது திரோதான சத்தியையாயிற்று. நகாரம் திரோதான சத்தி எழுத்தாகலின், அதனை முதலாக உடைய மந்திரமும் அவளதாயிற்று. நேமம், `நியமம்` என்பதன் மரூஉ. `இனிதாய், உதமாக, தலைவியாய்` என ஆக்கங்கள் வருவிக்க. `உலகப் பயனை வேண்டுவார்க்குத் தூல பஞ்சாக்கரம் உரியது` என்பதை விளக்கியவாறு.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage