
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.
English Meaning:
The Significance of Letter ``Si`` in the ChakraIn the eight directions is the letter ``Si`` in the Chakra
From that One Letter in places eight
Arose the Five Gods,
And the Saktis Nine,
And the Bindu and Nada;
Thus flourishes the Mantra, the Word Pure.
Tamil Meaning:
எட்டுநிலை, மேற்காட்டிய சக்கரத்துள் நடு அறையைச் சுற்றியுள்ள அறைகள். அவற்றில் சிகாரம் நிற்றல் மேலே கூறப்பட்டது.அவ்வெட்டில் கோணத்திசை (மூலைகள்) நான்கும் ஒழித்து எஞ்சிய நான்கிற்கும் நேர் நேராக நடு அறையுள் மேலைச் சக்கரத்தில் உள்ள `ஹர`: என்பதை நீக்கி ஹும், ஹௌம், ஹம், ஹ: என்பவற்றைப் பிரணவத்திற்கு மேலே பொறிக்கப் பெருமானோடு, பெருமாட்டிக்கும் உரிய சக்கரமாய் விளங்கும்.
Special Remark:
இருமூன்று, ஆறாவது உயிரெழுத்து; ஊ. ஈரேழு, பதினான்காவது உயிரெழுத்து; ஔ. இவை தனியாய் நிற்றலேயன்றி, மேற்காட்டியவாறும் நின்று பீசங்களாம். விந்து, அம். நாதம், அஃபான்மொழி, சத்தி. `ஓங்கிட மந்திரம்பான்மொழி பாலேபட்டது` என வேறு தொடராக்குக.இதனால், மேற்காட்டிய சிவ சக்கரம் சிவம் சக்திகளது சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage