
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.
English Meaning:
SivayanamaInscribe Letters Five Si Va Ya Na Ma;
In the next row place Letters Ya Na Va Si Ma;
Further on place the letters in order thus;
Ma Va Ya Na Si; Si Ya Na Ma Va;
And Va Si Ma Ya Na
Thus do the Five Letters in Chakra permuted stand.
Tamil Meaning:
மேற்கூறிய பேரம்பலச் சக்கரம் மேலை மந்திரத்திற் கூறியவாறு அமைந்த பெருமையுடையது ஆகலின், அதன்கண் எல்லா உலகங்களும் அடங்குவனவாம். அதனால், அந்தச் சக்கரத்தையே திருவம்பலமாகக் கொண்டு விளங்கும், சிதாகாய வெளியனாகிய சிவபெருமானாகிய பசுவை, அந்தச் சக்கரத்தையே கன்றாகக் கொண்டு , அவனது திருவருளாகிய பாலைத்தருமாறு எம் ஆசிரியர் நந்தி பெருமான் கறந்து கொண்டார். அதன் பயனாகக் குன்றின் உச்சியில் ஏறி நின்றவர் போன்ற உயர்வை அவர் பெற்றவரானார்.Special Remark:
உலகரால் அறியவராத நுண்பொருளாய் இருத்தல் பற்றிச் சிதாகாசத்தை, ``மாய நாடு`` என்றும், ஆயினும் அது மாயம் (வஞ்சனை) உடையதன்று என்றற்கு, ``நன்னாடு`` என்றும் கூறினார். நடு இரண்டடிகள் ஏகதேச உருவகம். மெய்யுணர்வின் மிக்காரை, ``குன்றேறி நின்றார்``1 என்பவாகலின், ``குன்றிடை நின்றிடுங் கொள்கையன்`` என்றார். ``ஆம்`` என்றது. ``முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை மெய்நிலைச் சொல்லாய்`` 2 நின்றது. ஈற்றடி, நந்தி பெருமான் கயிலையைக்காக்கும் அதிகாரம் பெற்று நின்றதையும் உட்கிடையாகக் கொண்டது. நந்தி பெருமான் பயன்பெற்றவாற்றைக் கூறி, `பிறரையும் அவ்வாறு பெறுக` என அருளிச் செய்தவாறு.இதனால், மேற்கூறிய சக்கரம் பயன்தருதற்கு அனுபவம் காட்டப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage