
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
பதிகங்கள்

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.
English Meaning:
Say ``Hara Hara`` and End Birth CycleSay ``Hara Hara
Nothing formidable to you;
They who know not this,
Say not ``Hara Hara;``
Say ``Hara Hara``
And you shall a Celestial be;
Say ``Hara Hara``
You shall no more birth know.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படைSpecial Remark:
இதனால், மேற்குறித்த சக்கரத்தின் நடுவண் நிற்கும் `ஹர`: என்னும் மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. சிவனுக்கு இப்பெயர் பாசங்களைப் போக்குபவனாதல் பற்றி வந்தது. மெய்கண்ட தேவரும் தமது நூலுள் 1 இப்பெயரையே சிறந்தெடுத்தோதினார். `சிவன்` என்னும் பெயரது சிறப்பே இதுகாறும் கூறிவந்தமையின், இதனை இங்குக் கூறல் வேண்டினார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage